ஸ்ரீ ராமானுஜர் - 2 - ஆறு கட்டளைகள்
சமுதாயப்பணி
உயிர்களிடத்தில் பேதங்கள் பார்க்காத இராமானுஜர், சமுதாயத்திலும் தீண்டத் தகாதோர் படும் வேதனைகளை கண்டு
மிகவும் மனம் வருந்தினார். இதனால் மனமிரங்கி, அவர்களுக்கு “திருக்குலத்தார்” என்ற பெயரிட்டு, அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளித்தார். இப்படியாக அவர் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கான குரல் எழுப்பியதில் முதலாமானவராக இன்றும் அனைவராலும்
புகழப்படுகிறார்.
ஆலயங்களுக்குச் சென்று இறைவனைத் தொழும் உரிமையையும்
பெற்றுக் கொடுத்தார். அதோடு மட்டுமில்லாமல், அக்காலத்திலேயே படித்தவர், அரசன், ஆண்டி, ஏழை, பணக்காரன்
என்கிற பாகுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்கியவர்.
ஆறு கட்டளைகள்
கோயிலைச் சுற்றி பல வகையான தொழில்களை ஏற்படுத்தினார்.
கோயில் சீரமைப்போர், காவிரி
ஆற்றைக் காப்போர்,
மண்பானை செய்வோர், ஓவியர்கள், கல்தச்சர், மரத்தச்சர், பிரபந்த
ஆய்வாளர்கள்,
இசை மற்றும் நாட்டிய கலைஞர்கள் போன்றவர்களை நியமித்து
இருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அவருக்கு தொலைநோக்கு சிந்தனை இருந்தது வியப்பளிக்கிறது.
வாழும் இடத்தை முன்னேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட பணிகளை அவர்
வட இந்தியா வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மடங்கள் அமைத்து, அதன் மூலம் எண்ணற்றவைகளை செய்தார்.
இராமானுஜர் பழுத்த பழமாகி, அவர் சிஷ்யகோடிகளிடம் ஆறு கட்டளைகளை வைத்தார். அவற்றை கீழே
காணலாம்!
ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.
திவ்யப் பிரபந்தத்தை நாம் மட்டும் ஓதாமல், பிறர் ஓத உதவ வேண்டும்.
திவ்ய தேசங்களில் தினமும் அமுதுபடி செய்ய வேண்டும்.
திருநாராயணபுரத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு இருக்க
வேண்டும்.
துவய மந்திரத்தை அர்த்தத்துடன் தினம் அனுசந்திக்க வேண்டும்.
ஒரு பாகவதனின் நிழலில் அண்டி இருக்க வேண்டும்.
வாழ்நாளில் இதில், ஏதேனும் ஒரு கட்டளையையாவது நாம் பின்பற்றி நற்கதி அடைய வழி
வகுக்க வேண்டும்.
அடியார்கள் வாழ, அரங்க நகர்
(ஸ்ரீரங்கம்) வாழ,
இராமானுஜரின் கீர்த்தி பாரெங்கும் பல்லாண்டு காலம் இருக்க, உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே சரணம்.
யதிகளின் நாதனான
இராமானுஜரின் ஸஹஸ்ராப்தி (ஆயிரமாவது வருடம்) வைபவத்தை அவர் வகுத்த வழியிலேயே
அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக.
No comments