இந்து சமயம் - ஸமார்த்தம்
கி.பி 8.ம் நூற்றாண்டில் ஸ்ரீ ஆதி சங்கரர் இறைவனை அடையும் மார்கங்களை ஆறு (6 ஷண்மதங்கள்) வகையாக பிரித்தார். அவை முறையாக,
1.கணபத்தியம்
2.கௌமாரம்
3.சைவம்
4.வைணவம்
5.சாக்தம்
6.சௌரம்
கணபத்தியம் - முழுமுதல் கடவுள் கணபதியை வணங்கும் முறை.
கௌமாரம் - முருகனை முழுமுதல் கடவுளாக கொண்ட முறை. குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. முருகனை வணங்கினால் மோட்சம் உண்டு. “கௌ” என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில் வாகனன் என்பதால் கௌமாரம் எனப் பெயர் பெற்றது.
சைவம் ~ சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது. பக்தி என்ற அடிதலம் கொண்டு தியானம் தவம் மூலம் சாதனைகள் செய்து சிவனின் அருளை பெறலாம்.
வைஷ்ணவம் - விஷ்ணுவையும், அவரின் பத்து அவதாரங்களையும் வணங்கும் முறை.
சாக்தம் - சக்தியை வழிபடும் கடவுளாகக் கொள்ளும் முறை ஆகும். சக்தியை தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு. உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது கருத்து. பெண் சக்தியை வணங்கும் சாக்தம், சக்தியை வழிபடுவதால் நாம் அத்வைத மோஷம் அடையலாம்.
சௌரம் - சூரியனை முழுமுதல் கடவுளாக கொண்ட முறை. சூரிய நமஸ்காரம் ஜென்மவிமோட்சனம். சௌரம் சைவத்திலும் வைணவத்திலும் கலந்துவிட்டது. சைவத்தில் சிவசூரியனாகவும் வைணவத்தில் சூரியநாராயணனாகவும் உள்ளார். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூருகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. ஆனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள்.
பின் நாளில் இந்த ஆறு பிரிவுகளையும் சேர்த்து பொதுவானதாக "ஸமார்த்தம்" என்றும் பிரிந்தது.
கணபதி, முருகன், சிவன், விஷ்ணு, சக்தி மற்றும் சூரியன் போன்ற எல்லா கடவுளையும் வணங்கும் முறை.
No comments