Header Ads

கோவில்கள் - சிவாலய அமைப்பு











சிவன் கோவில்கள்

சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும்.  இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன. பெரும் பாலானான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும், பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன.

வேறு பெயர்கள்

சிவாலயம் - சிவ + ஆலயம்
சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
சிவத் தலங்கள்
சிவன் கோயில்கள்

தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.

சிவாலய வகைகள்

சிவாலயங்களை எண்ணிக்கை, வழிபட்டவர்கள், மூலவரின் சிறப்பு, தலவரலாறு, தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் என பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துகின்றனர்.

சிவாலய அமைப்பு

சிவாலயங்களின் கோபுரத்தினை கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களை பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம்.

விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால், பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.

பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானை முருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

சிவாலய வழிபாட்டு முறை

சிவாலயங்களின் கோபுரத்தினை கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களை பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம்.

விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால்,பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.

பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானைமுருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

இந்த சிவ திருத்தலங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அட்ட மூர்த்த தலங்கள், முப்பீட தலங்கள், பஞ்ச பூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச மன்ற தலங்கள், பஞ்ச பீட தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச ஆசன தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச லிங்க தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், நவ சமுத்திர தலங்கள், தச வீராட்டன தலங்கள் எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள், ஆதி கைலாய தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. 

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டவை:

   அட்ட மூர்த்த தலங்கள்
   முப்பீட தலங்கள்
   பஞ்ச பூதத் தலங்கள்
   பஞ்ச கேதார தலங்கள்
   பஞ்ச தாண்டவ தலங்கள்
   பஞ்ச மன்ற தலங்கள்
   பஞ்ச பீட தலங்கள்
   பஞ்ச குரோச தலங்கள்
   பஞ்ச ஆசன தலங்கள்
   பஞ்ச குரோச தலங்கள்
   பஞ்ச லிங்க தலங்கள்
   ஆறு ஆதார தலங்கள்
   சப்த விடங்க தலங்கள்
   அட்டவீரட்டானத் தலங்கள்
   நவலிங்கபுரம்
   நவ கைலாயங்கள்
   நவ சமுத்திர தலங்கள்
   தச வீராட்டன தலங்கள்

பாடல் பெற்றதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டவை:

   தேவாரத் திருத்தலங்கள்
   திருவாசகத் திருத்தலங்கள்
   தேவார வைப்புத் தலங்கள்
   திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்
   திருவிசைப்பாத் திருத்தலங்கள்

பிற சிவத்தலங்கள்:

   வன விசேச தலங்கள்
   முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
   சோதிர்லிங்க தலங்கள்
   ஆதி கைலாய தலங்கள்

Powered by Blogger.