ஜோதிடம் என்றால் என்ன? - Part 1
ஜோதிடம் என்றால் என்ன?
ஜோதிடம் என்பது ஜோதிஷம் என்ற வட மொழி சொல்லின் தமிழ்
வடிவம். ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரிகக்லாம், ஜோதி என்ற வட சொல்லுக்கு தமிழில் ஒளி அல்லது ஒளிக்கதிர்
என்று பொருள்,
இஷம் என்ற வடசொல்லுக்கு இயல் என்று பொருள். ஆக ஜோதிஷம்
என்றால் ஒளிக்கதிரியியல் என்று பொருள்.
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய
பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான
பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
ஜோதிட சாஸ்திரம்:
அண்ட வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும், அவைகளின் கதிர்வீச்சுகளும்; உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை
(தாக்கங்களை) உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன என்பது நிரூபணமான முடிவு.
கோள்களின் இயக்கங்களை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள்; அந்தந்த கோள்களின் நிலை, கதிர்வீச்சுகளின் பலம், வேகம், நகர்வுகள்
அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை (நன்மை தீமைகளை)
ஜோதிட-கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்டத்தில் லட்சகணக்கான விண்மீன் குடும்பங்கள் (நட்சத்திரங்கள்)
உள்ளன. அவற்றுள் நம்மைச் சூழ்ந்துள்ள
சூரிய-விண்மீன் குடும்பமும் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் பல கிரகங்களும், அவற்றின் துணைக் கிரகங்களும் உள்ளன. அவை யாவும் சூரியனை
தலைமை - மையமாக கொண்டு அதனைச் சுற்றி் வலம் வருகின்றன. இவற்றுள் நாம் இருக்கும்
பூமியும் ஒன்றாகும்.
இந்த கோள்களில்; பூமிக்கு ஒரு துணைக்கோளும்; வியாழனுக்கு 63
துணைக்கோள்களும்,
சனிக்கு 62
துணைக்கோள்களும்,
யுரேனசுக்கு 27
துணைக்கோள்களும்,
நெப்டியூனுக்கு 13 துணைக்கோள்களும்;
செவ்வாய்க்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய
துணைக்கோள்களும் உள்ளன. புதனுக்கும், வெள்ளிக்கும்
துணைக்கோள் இல்லை.
இந்த கிரகங்கள் யாவும் தம்மிடையே உள்ள ஈர்ப்பு விசையினால்
இணைக்கப்பெற்று ஒரு குடும்பம் போல் அண்ட வெளியில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இவற்றுள் பூமியினுடைய துணைக்கோளான சந்திரனின் அசைவு பூமியில் உள்ள உயிர்கள் மீது
பல தாக்கங்களை உண்டுபண்ணுவதால்; சோதிட
சாஸ்திரத்தில் விஷேஷமாக கூறப்பெற்றுள்ளது.
சூரியன் உட்பட எல்லா விண்மீன்களும் ஒளிர்வன. சூரியனுடைய
கிரகங்களும்,
உப-கிரகங்களும் தானாக ஒளிர்வதில்லை. ஆனால் அவைகள் யாவும்
விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன (பிரதிபலிக்கின்றன). புராதன சோதிட
நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்களில் உண்மைக் கோள்கள்-7 என்றும், மற்றைய
இரண்டும் நிழற்கோள்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளது.
பூமி சூரியனை மையமாக கொண்டு Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக ஊடாக தனக்கென
அமைந்த பாதையில் சுற்றுவதைப்போல்; பூமியின்
உடன் பிறப்புகளான மற்றைய 7 கிரகங்களும்
இவ் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக தத்தமது பாதைகளில், வித்தியாசமான வேகங்களில் சூரியனை சுற்றி வருகின்றன
என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிவு. (சந்திரன் பூமியின் உபகிரகம் அதனால் அதன் சுற்று
வித்தியாசமானது)
சூரிய கோள்கள் பின்வருமாறு:
1. சூரியன் - ஞாயிறு - Sun,
2. சந்திரன் - திங்கள் - Moon,
3. செவ்வாய் - Mars
4. புதன் - Mercury
5. குரு - வியாழன் - Jupiter
6. சுக்கிரன் - வெள்ளி - Venus
7. சனி - Saturn
8. இராகு - (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)
நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல்
பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமி
தன்னைத் தான் ஒருமு்றை சுற்ற ஒரு நாளும். சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாட்களையும் எடுக்கின்றது. அதனைச் சோதிடம்; சூரியன் பூமியை சுற்றிவர 365 1/4 நாட்கள் எடுக்கின்றது என கணிக்கிறது. பூமி தன்னைத் தானே
சுற்றுவதனால் பகல், இரவு
தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதனால் பருவ காலங்கள் உண்டாகின்றன.
இதுவே இயற்கையின் நியதி.
பூமியின் உப-கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு
பூமியை சுற்றி வர சைடீரியல் மாதப்படி 27.32 நாட்களும்; சந்திர
மாதப்படி 28.25 முதல் 29.53 நாட்களும் ஆகின்றன. சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை
சுற்றுவதற்குள் பூமி 27 முறை
தன்னைத் தானே சுற்றி விடுகின்றது. அத்துடன் சந்திரன் பூமியுடன் இணைந்து
சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. சந்திரன் பூமியை சுற்றுவதனால் பூமியில் பூரணை
(பௌர்ணமி),
அமாவாசை, போன்ற 30 திதிதிகள் உண்டாகின்றன
Zodiac என்றழைக்கப்பெறும் இராசி மண்டல வலயம்:
புவியில் கோள்களினால் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்)
மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும்
சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட கற்பனையான "Zodiac
- என்றழைக்கப்படும் இராசி மண்டல வலயம்" அல்லது "அயன
வீதி" என்ற ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.
Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் இராசி மண்டல வலயம்; கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். இவ் வலயம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியெனக்
கூறலாம். பூமியை சுற்றியுள்ள கற்பனையான
இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி
வருவதாக சோதிடம் கணிக்கின்றது.
கிரகங்கள் சூரியனை வலம் வரும்போது நீள் வட்டமாக
சுற்றுவதனால் Ecliptic
எனப்படும் கிரக சுற்றுப்பாதை முட்டை வடிவமாக அமைந்துள்ளது.
அதுபோல் Zodiac
என்று அழைக்கப்படும் இராசி மண்டல வலயமும் முட்டை வடிவினதாக
அமைகின்றது.
பூமியின் துருவ அச்சினை மையமாகக் கொண்டு பூமியைச் சுற்றி
உள்ள "Zodiac
எனப்படும் கற்பனை இராசி மண்டல வலயத்தில் " உள்ள 360 பாகைகளையும் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாக பிரித்து கணிக்கப்பட்டுள்ளது. அவை "1" பாகையில் இருந்து "30" பாகை வரை "மேஷ-ராசி" எனவும்; "31" பாகை முதல் "60" பாகை வரை "ரிஷப-ராசி" எனவும்; இதுபோல் அடுத்து வரும் ஒவ்வொரு 30 பாகைகளைக் கொண்ட பகுதிகளும்; கீழே தரப்பட்டுள்ள 12 - இராசிகளின் பெயர்களால் அழைக்கப்பெறுகின்றன. இராசி மண்டல
வலயத்தில் உள்ள மேஷ ராசியில் உதயமாகும் சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும்
வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.
இராசிகள்-12:
1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம்,
8. விருச்சிகம், 9. தனுசு,10. மகரம், 11. கும்பம்,
12. மீனம் என்பன.
வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்)
அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல
வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன.
இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.
நட்சத்திரங்கள் - 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,
4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,
13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,
19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,
25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.
நட்சத்திரங்களும் ராசிகளும்:
சோதிட கணிப்பின் படி;
பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல
வலயம்;
பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள
ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும்
ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த
ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு
குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த
பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம்
கூறுகின்றது.
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே
ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும்
சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி
நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.
Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை
கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக
இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக
வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது
சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி
உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே
குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு
குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "/ல" என
குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக்
குறிக்கும் பாகை,
கலை, விகலை
அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன.
அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின்
அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல
நிறத்தையும்,
செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல்
ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு
நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.
ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை
வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின்
கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள
தாதுப்பொருள்கள்;
கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த
அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக
"அதிர்ஷ்டக் கற்களை"
பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில்
அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த
கதிர்கள் அழியவும், திறன்
மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின்
புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர்
எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் "உச்சம்" பெற்றதாக
கணிக்கப்பெறுகின்றது. இதை "கிரக வலிமை" என்பார்கள்.
ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது
போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட
காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு
காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ
காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு
உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச்
சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும்
போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு
வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப்
புலத்தை ஏற்படுத்துகிறது.
வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம
புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின்
வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு
பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது.
அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு
என்று கூறலாம்.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப்
பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு
போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக)
அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம்
பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு
முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின்
உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி
அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
மேலும், வலிமையான
காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல்
போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை
நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட
இயக்கங்களைக் கொடுக்கும்.
அது போலவே, அண்ட வெளிக்
கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள
மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை
ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட
சாஸ்திரமாகும்.

No comments