அவதாரங்கள் - வராக அவதாரம்
வராக அவதாரம்
கஷ்யபர் என்கிற பெயரில் ஒரு ரிஷி இருந்தார். அவருக்கு
பதின்மூன்று மனைவிகள் – திதி, அதிதி, தனு, காஷ்டா, சுரசா, இலா, வினதா, கத்ரு, சுரபி, தாம்ரா, குரோதவசா, விஷ்வா, முனி.
அவர்களில் எல்லோரையும் விட மூத்தவள் திதி. இரண்டாவது அதிதி.
திதிக்கு புத்திரர்களானவர்கள் தைத்யர்கள்! அதிதிக்கு புத்திர்களானவர்கள்
ஆதித்யர்கள்! (ஆதித்யர்கள் என்றால் தேவர்கள்.)
ஒரு தடவை கஷ்யபமஹாராஜர் வந்தார். வந்தவர் உட்கார்ந்தார்.
சந்தியாவந்தனம் செய்தார். திதி அவருடைய சரணங்களைப் பிடித்துவிட ஆரம்பித்து
விட்டாள்.
கஷ்யபர் சொன்னார், ‘என்ன சமாசாரம்?’
கஷ்யபரோ தவத்தில் இருப்பார். எப்போதாவது வீட்டுக்கு
வருவார்.
திதி சொன்னாள், ‘என் சகோதரிகள் எல்லோரும் புத்திரவதியாக இருக்கிறார்கள்.
எனக்குத் தான் புத்திரனேயில்லை. நீங்கள் கிருபை செய்தீர்களானால், புத்திரன் ஆகியே தீர வேண்டும்!’
கஷ்யபர் சொன்னார், ‘இப்போது வானிலை நல்லதில்லை! புரிந்ததா? ஆமாம்!’
देवस्त्रिभिः पश्यति देवरस्ते ॥
‘இது கோதூளியின் சமயம்! இந்த சமயம் சங்கரபகவான் தன்னுடைய
பூத-கணங்களோடு களித்திருக்கிறார் ஆகாசத்தில்! உலாவிக் கொண்டிருக்கிறார்! கோதூளி
வேளையில் கர்ப்பாதானம் செய்தால், கர்ப்ப-சிசுவின்
மேல் பூத-பிரேதங்களின் தாக்கம் உண்டாகி விடுகிறது!’
மாதா பேச்சைக் கேட்பதாய் இல்லை.
கஷ்யபரிஷி சாபம் கொடுத்து விட்டார் – ‘உனக்கு ஒன்றில்லை, இரண்டு புத்திரர்களாவார்கள்! உன்னுடைய அந்த இரண்டு
புத்திரர்களுமே துஷ்டர்களாக இருப்பார்கள்! துராச்சாரம் உள்ளவர்களாக இருப்பார்கள்!
பாவிகளாக இருப்பார்கள்!’
மாதா பயந்து விட்டாள். ‘இல்லை, இல்லை!
எனக்கு துஷ்ட-புத்திரர்கள் வேண்டியதில்லை!’
கஷ்யபர் சொன்னார், ‘ரெண்டும்கெட்டான்களை நான் எங்கிருந்து கொண்டு வருவது? அதுவோ ஆகியே தீரும்!’

இப்போது, இந்த
தேவர்கள் இருந்தார்களே, அவர்கள்
எல்லோரும் அழுது கொண்டே பிரம்மாவிடம் போனார்கள்.
பிரம்மா சொன்னார், ‘என்னவாயிற்று?’
‘மஹாராஜா, திதியின்
கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் பிரகாசம் அவ்வளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது – ஜென்மமெடுத்த பிறகு, நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார் போலிருக்கிறது!’
பிரம்மா சொன்னார், ‘திதியின் கர்ப்பத்திலிருக்கும் பாலகன் சாதாரணமானவரில்லை!
இவர் ரொம்ப விசித்திரமானவர்!’
मानसा मे सुता युष्मत् पूर्वजाः सनकादयः ।
चेरुर्विहायसा लोकान् लोकेषु विगतस्पृहाः ॥
பிரம்மா சொன்னார், ‘இந்த ரெண்டுபேரும் பகவானுடைய துவாரபாலகர்கள் – ஜெயன், விஜயன்! ஒரு
தடவை என்னுடைய மானச-புத்திரர்கள் (பிரம்மாவுடைய மானச-புத்திரர்கள் – மனதிலிருந்து பிறந்த நாலு பிள்ளைகள் – பெயர் ஸனகர், ஸனந்தனர், ஸநாதனர், ஸனத்குமாரர் – இந்த நாலு சகோதரர்களும் பார்ப்பதற்கு ஐந்து வயசானவர்களாகத்
தெரிவார்கள். வயசோ 50 ஆயிரம்
வருஷங்கள்! இவர்கள் பூர்வஜர்களுக்கும் பூர்வஜர்!) வைகுண்டநாதபகவானை தரிசிக்க
வேண்டி,
வைகுண்டத்திற்கு வந்தார்கள். அங்கே நின்றிருந்தார்கள்
ரெண்டு பேர் –
ஜெயன், விஜயன்!
அவர்கள் தடுத்து விட்டார்கள். ‘உள்ளே போக
முடியாது நீங்கள்!’
இப்போது இங்கே கொஞ்சம் குளறுபடியாகி விட்டது.
அவர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் துவாரபாலகர்கள்! போக விட மாட்டோம்!’
இவர்கள் சொன்னார்கள், ‘நாங்கள் பகவானுடைய புத்திரர்கள்! எங்களை யார் தடுக்க
முடியும்?’
‘ஐய்யா, போக
வேண்டுமானால்,
கேட்டு விட்டுப் போக வேண்டாமா? கேட்காமலேயே, நீங்கள்
நுழைந்து கொண்டிருக்கிறீர்களே? போக
முடியாது!’
இரண்டு தரப்பினருக்கிடையே கொஞ்சம் விவாதம் முற்றி விட்டது.
பகவானுடைய பாதுகாவலர்கள் தள்ளி-கிள்ளி விட்டு விட்டார்களோ, என்னவோ – தெரியாது.
சனத்குமாரர் சொன்னார், ‘இவ்வளவு உச்சிக்கு வந்து விட்டோம் – எங்களுடைய வீழ்ச்சியாக முடியாது என்று நீங்கள்
நினைக்கிறீர்களா?
நாங்கள் உங்களுக்கு சாபம் கொடுக்கிறோம் – நீங்கள் ரெண்டுபேரும் தைத்யராகி விடுவீர்கள்! ராக்ஷசராகி
விடுங்கள்!’
இரண்டு துவாரபாலகர்களும் சரணங்களில் விழுந்து விட்டார்கள். ‘மன்னித்து விடுங்கள், பகவன்! தவறு நடந்து விட்டது!’
இந்த மஹாத்மாக்களுக்கு குரோதம் வந்தாலும் ஒரு செகண்டை விட
அதிக சமயம் நிற்பதில்லை. பகவானும் சொன்னார், ‘என் துவாரபாலகர்களிடம் தவறு நடந்து விட்டது! அப்படி
செய்திருக்கக் கூடாது! நீங்கள் மன்னித்து விடுங்கள்!’
‘சரி, இவர்களுக்கு
ராக்ஷசர்கள் என்னவோ ஆகவே வேண்டியிருக்கும்! ஆனால், மூன்று ஜென்மங்களுக்குப் பிறகு, இவர்களுக்கு மோக்ஷம் கிடைத்து விடும்!’
அதே ஜெயன்-விஜயன் இன்று திதிமாதாவின் கர்ப்பத்தில்
புத்திரர்களாகி இருக்கிறார்கள். ஒருவர் ஹிரண்யகசிபு! மற்றவர் ஹிரண்யாக்ஷன்!
இரண்டாவது ஜென்மத்தில் ஆவார்கள் – ராவணன் – கும்பகர்ணன்! மூன்றாவது ஜென்மத்தில் ஆவார்கள் – சிசுபாலன் – தந்தவக்ரன்!
மூன்று ஜென்மங்களுக்கு சாபம் கிடைத்து விட்டிருந்தது.
இங்கே திதிமாதா இரண்டு அழகான புத்திரர்களுக்கு ஜென்மம்
கொடுத்தாள். பெரிய பாராக்கிரமசாலிகள்!
உண்மையில் திதி என்று பேதபுத்தியைச் சொல்கிறோம்.
பேதபுத்தியின் பெயரே திதி! திதிக்கு இரண்டு புத்திரர்களாகிறார்கள் – ஹிரண்யகசிபு – ஹிரண்யாக்ஷன்!
ஹிரண்யகசிபு என்று கர்வத்தை(செருக்கை)ச் சொல்கிறோம். ஹிரண்யாக்ஷன் என்று லோபத்தைச்
சொல்கிறோம். கர்வமும், குரோதமும்
கண்ணுக்குப் புலப்படுகிறது. ஆனால், லோபம்
புலப்படுவதில்லை;
வளர்ந்து கொண்டே போகிறது.
जिमि प्रति लाभ लोभ अधिकाई॥
எவ்வளவுக்கெவ்வளவு லாபம் அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு லோபம் வளர்ந்து கொண்டே போகிறது.
ஹிரண்யாக்ஷன் பெரிய துஷ்டனாக இருந்தார்.
பிருத்வி மூழ்கி விட்டது சமுத்திரத்தில்! பிரளயகாலமாக
காட்சியளித்துக் கொண்டிருந்தது!
பிரம்மா தன் பிள்ளை சுவயம்புவமனுவிடம் சொன்னார், ‘சிருஷ்டியை விஸ்தாரமாக்குவதில், நீ எனக்கு சகாயம் செய்!’
‘பூமியே இல்லையென்கிற போது, விஸ்தாரம் எங்கிருந்து செய்வது? அதுவோ மூழ்கி விட்டது!’
இங்கே தேவர்கள் அழுது கொண்டே சொன்னார்கள், ‘ஹிரண்யாக்ஷன் எங்களுக்கு இந்த கஷ்டத்தைக் கொடுத்தார்!
ஹிரண்யாக்ஷன் எங்களிடமிருந்து இதைப் பறித்துக் கொண்டார்!’
வருணதேவர் சொன்னார், ‘என்னுடைய ராஜ்ஜியத்தையே கைவிட்டு விடச் சொல்கிறார்!’
பிரம்மாவுக்கு முன்னால் ஒரு பிரச்சனை – மூழ்கியிருக்கும் பிருத்வியை வெளியில் எடுப்பது எப்படி? இன்னொரு பிரச்சனை – ஹிரண்யாக்ஷன் எல்லோருடைய கண்ணிலும் விரலை விட்டு ஆட்டிக்
கொண்டிருந்தான் –
அவனிடமிருந்து தப்பிப்பது எப்படி?
பிரம்மா பரமாத்மாவை ஸ்துதி பாடினார்.
ஸ்துதி செய்வது நம்முடைய அதிகாரம். பலன் என்ன கிடைக்கும்
என்று யோசிப்பது வீண்! ஸ்துதிக்குப் பிறகு, எந்த சூத்திரம் மிஞ்சுகிறதோ அதன் பெயர் காத்திருப்பு!
ஸ்துதி பாடுங்கள்! காத்திருங்கள்!
பிரம்மா நாராயணருடைய ரொம்ப அழகான ஸ்துதியைப் பாடினார்.
இப்படி எழுதியிருக்கிறது – ரொம்ப பலமாக அவருக்கு தும்மல் வந்து விட்டது!
மூக்கிலிருந்து ஒரு சின்னச்சிறு பன்றிக்குட்டி வெளிப்பட்டது! இவருடையதே பெயர் தான்
வராகபகவான்!
பாகவதத்தில் 24
அவதாரங்களின் கதை இருக்கிறதல்லவா? முதல்
அவதாரம் சனத்குமாரர்கள்! இரண்டாவது வராகபகவானுடையது!
வராகபிரபு தன்னுடைய சரீரத்தை பலமாக உதறினார். அதனால், அவருடைய சரீரத்திலிருந்து ரோமங்கள் பொலபொலவென்று உதிர்ந்து
விட்டன. அதைத் தான் நாம் ‘தர்ப்பை’ என்கிறோம்!
இந்துக்களின் ஒவ்வொரு பவித்ர-காரியத்திலும் தர்ப்பையின்
பிரயோகம் மற்ற எல்லாவற்றையும் விட அதிகமானது. ஹோமம் செய்யும் போது விரலில்
தர்ப்பையை மோதிரமாக அணிந்து கொள்கிறோம். ரிஷிகள் இடுப்பில் தர்ப்பையை கட்டிக்
கொள்கிறார்கள். பாலகனுக்கு பூணூல்-கல்யாணம் நடக்கும் போது, அதிலும் தரப்பை கட்டப்படுகிறது. தர்ப்பை இல்லாமல் நாம்
ஹோமம் செய்ய முடியாது. இந்த தர்ப்பை இருக்கிறதே, இது வராகபகவானுடைய ஸ்ரீஅங்கத்தின் ரோமம்!
பகவான் சமுத்திரத்தில் பலமாக ஒரு முழுக்கு போட்டார்.
அவ்வளவு தான் –
பிருத்வியை தன்னுடைய கோட்டுமுனையில் வைத்துக் கொண்டு
புறப்பட்டு விட்டார். பிருத்வியை எடுத்துக் கொண்டு மேலே எழுந்து கொண்டிருந்தார்.
ஆகாச-மார்க்கத்தில் நாரதர் பறந்து கொண்டிருந்தார்.
இங்கிருந்து,
ஹிரண்யாக்ஷன் பறந்து கொண்டிருந்தார்.
புராதன-பாரதத்தின் விஞ்ஞானம் அவ்வளவு விசித்திரமாக இருந்தது
–
மந்திர-சக்தியால் – ஜனங்களால் பறக்க முடிந்தது. இது ரிஷிகளின்
மந்திர-விஞ்ஞானம்! இதை வெளிநாட்டவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்! வெளிநாட்டில்
இந்த விஞ்ஞானத்தை வைத்து ரிசர்ச் நடந்து கொண்டிருக்கிறது. பாரதத்தில்
இருப்பவர்களுக்குத் தான் காப்பியடிப்பதிலிருந்து அவகாசமே கிடைப்பதில்லையே!
இப்போது, இங்கிருந்து
பறந்து கொண்டிருந்தார் நாரதர். அங்கிருந்து, பறந்து கொண்டிருந்தார் ஹிரண்யாக்ஷன். ஹிரண்யாக்ஷன் நாரதரைப்
பார்த்த உடனேயே சொன்னார், ‘பாபா, இதோ
பாருங்கள்!’
நாரதர் சொன்னார், ‘என்ன சமாசாரம்?’
‘வெறும் வீணை வாசிப்பது தான் உங்களுக்கு வருமா? ஏதாவது குஸ்தி-கிஸ்தியும் வருமா?’
நாரதர் சொன்னார், ‘ஸ்ரீகிருஷ்ண கோவிந்த் ஹரே முராரே, ஹே நாத் நாராயண் வாசுதேவ! ஐயா, கீர்த்தனம் செய்வதென்னவோ எனக்கு வரும். சண்டை போடுவது
வராது!’
ஹிரண்யாக்ஷன் சொன்னார், ‘ஆனால், என்னோடு
உங்களுக்கு யுத்தம் செய்யவே வேண்டியிருக்கும்! ஏனென்றால், என் தோள்கள் தினவெடுக்கின்றன!’
நாரதர் சொன்னார், ‘நான் தான் உங்களோடு யுத்தம் செய்யவில்லை – வேறு யாராவது பயில்வானுடைய பெயரை உங்களுக்கு சொன்னேன்
என்றால் எப்படியிருக்கும்?’
‘சீக்கிரம் சொல்லுங்கள்.’
நாரதர் சொன்னார், ‘இறங்குங்கள் கீழே! சமுத்திரத்திலிருந்து ஒரு வராகம்
பிருத்வியை தன்னுடைய கொம்பில் வைத்துக் கொண்டு, வெளிவந்து கொண்டிருப்பார். அந்த வராகத்தைப் போய் பிடித்துக்
கொள்ளுங்கள்! ஐயா,
உங்கள் தோள்களின் தினவு அப்படி தீர்ந்து விடும் – ஜீவனத்தில் திரும்ப எடுக்கவே எடுக்காது!’
ஏனென்றால், நாரதரைப்
பற்றி பாகவதத்தில் எழுதியிருக்கிறது,
नारदो देवदर्शनः ॥
நாரதருக்கு யார் கிடைக்கிராரோ, அவரை பகவானோடு சந்திக்க வைத்து விடுகிறார்! பக்தர் எப்படியோ, பகவானும் அப்படியே!
பக்தருடைய தரம் எப்படியோ, அதே ரூபமுள்ள பகவானோடு மோதவைத்து விடுகிறார்! இது நாரதருடைய
வேலை! ரொம்ப உன்னதமான சந்தர் நாரதர்!
வராகபகவான் பிருத்வியை எடுத்துக் கொண்டு, சமுத்திரத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
ஹிரண்யாக்ஷன் பார்த்தார், ‘ஆள் என்னவோ வாட்ட-சாட்டமாக, செழிப்பாகத் தான் இருக்கிறார்! ம்…! ஆனந்தம் என்னவோ வரும் மோதுவதில்!’
ஆனால், யாருடனாவது
மோத வேண்டுமானால்,
ஏதாவது சாக்குபோக்கு வேண்டுமே? காரணமில்லாமல் சண்டை நடக்க முடியாது!
யாருடைதாவது வஸ்துவை வலுக்கட்டாயமாக என்னுடையது என்று
சொல்லி விட்டால் போதும் – சண்டை
ஆரம்பமாகி விடும்!
ஹிரண்யாக்ஷன் திரும்ப-திரும்ப இடைமறித்துக் கொண்டிருந்தார் – பகவானோடு சண்டை போடுவதற்காக! அப்படியும், பகவான் மல்லுக்கு நிற்க விரும்பவில்லை என்று தெரிந்ததும், சொன்னார், ‘இதோ பார், இந்த
பிருத்வியை எடுத்துக் கொண்டு எங்கே போகிறாய்? இதுவோ என்னுடையது!’
அப்படியும், பகவான்
ஒன்றும் சொல்லவில்லை.
‘ஆமாம் – உன்னால்
பதில் எப்படி பேச முடியும்? காட்டு-விலங்கல்லவா? நான் கஷ்யபரிஷியின் மகன் – பிராம்மணன் – பூணூல்
போட்டிருக்கிறேன் – மூன்று-வேளை
சந்தி செய்கிறேன். இதற்கு என்ன துணிச்சல் இருக்கிறது – என்னோடு பேசுவதற்கு? காட்டு-விலங்காயிற்றே!’
பகவான் நினைத்தார், ‘என்ன அபாண்டம்!’ வராகபகவான் சிரித்துக் கொண்டே சொன்னார்,
सत्यं वयं भो वनगोचरा मृगा
युष्मद्विधान्मृगये ग्रामसिंहान् ।
न मृत्युपाशैः प्रतिमुक्तस्य वीरा
विकत्थनं तव गृह्णन्त्यभद्र ॥
‘நீங்கள் சொன்னது முழுக்க-முழுக்க உண்மை! நான் காட்டு-விலங்கு
தான்! ஆனால்,
உங்களைப் போன்ற நாட்டு-சிங்கத்தை தேடிக் கொண்டு தான்
இருக்கிறேன்!’
நாட்டு-சிங்கம் என்று நாயைச் சொல்கிறோம்!

பிறகு, ரெண்டுபேருக்குமிடையே
அவ்வளவு விசித்திரமான யுத்தம் மூண்டு விட்டது! யுத்தம் செய்து கொண்டே – செய்து கொண்டே, வராகபரமாத்மா
ஹிரண்யாக்ஷனின் முகத்தில் ஓங்கி அப்படியொரு ஒரு குத்து விட்டார் – அவருடைய ‘கோவிந்தாய-நமோ-நம’வாகி விட்டது!
தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவைத் தொழுதனர்.
No comments