Header Ads

மதுரை வீரன் - பூஜை, மந்திரம்

மதுரை வீரன்  பூஜை, மந்திரம்

ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு.

நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம்.

வழிப்பாட்டிற்கு முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவேண்டும்.

பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு "என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும்.

சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும்.

ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்தல் வேண்டும். நேரே வந்த ஆண்டவனிடத்தில் நாம் எப்படி பேசுவோம், என்னென்ன கேட்ப்போம், எப்படி அடிப்பணிவோம் அதையெல்லாம் அங்கே அன்பாக செய்ய வேண்டும். பூஜையின் இடைஇடையே ஆத்மார்த்தமான பாடல்கள் பாடி பஜனை செய்தல் மிக சிறப்பாகும்.

இரு கரங்களையும் மேல் உயர்த்தி பக்தி பரவசத்தோடு உடலை அங்கும் இங்கும் அசைத்தவாறு அல்லது ஆடியப்படி வீராயநம ஓம் வீராய நமஹா வீராயநம ஓம் நமசிவாய என்று கோஷமிடலாம்.

எம்பெருமானே, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், ஸ்ரீ வீரரின் பெயரில் தானங்கள், கோவில்களில் தொண்டுகள், இயலாதவர்களுக்கு உதவிகள் செய்தல், மற்றும் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின் இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில் காட்டுதல், இமயத்தின் உச்சத்தில் கோபம் இருப்பினும் கர்வம், கௌரவம் எதையும் பார்க்காமல் மன்னித்தல், தாய் தந்தையரை கண் போல் காத்து முதியோர்களுக்கு பணிந்து போதல், காமம் கண் மறைக்கும் நொடியில் அறிவுக்கு வேலை கொடுத்து மனத்தை அடக்குதல், செல்லும் வழியில் கர்பிணியையோ, விபத்தையோ, நாய் பூனை காகம் எலி முதலிய பிராணிகள் இறந்து கிடப்பதையோ, சவ ஊர்வலத்தையோ கண்டால் உடனே சில நொடிகள் உறுக்கமாக பிரார்தனை செய்ய வேண்டும்.


அசுர கோபத்திலும் மன்னிக்கும் குணம் வேண்டும், கொச்சை மொழி பேசுவதை தவிர்க்கவும், நம் பார்வயை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். வருடத்தில் குறைந்தது ஒருமுறையாவது உடல்குறைப்பாடுகள் உள்ளவர்களின் இல்லதிற்க்கு / அநாதை இல்லங்ளுக்கு சென்று பணமோ, சமையலுக்குண்டான பொருட்களோ அல்லது சமைத்த உணவோ வழங்குதல் மிக மிக நன்மை பயக்கும். ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெற்றதும் ஆயிரம் வெள்ளி சம்பளம் என்றால் அதில் குறைந்தது பத்து வெள்ளியாவது கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும். காமம், கேடு, சூது, வஞ்சம் போன்ற எண்ணங்களை வேரோடு அறுக்க வேண்டும். வேளைக்கு செல்லும் பொழுதும் சரி வரும் பொழுதும் சரி ஸ்ரீவீரரின் நாமத்தை ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய நமோ நமஹா என்று எண்ணுதல் சிறப்பு.






மதுரை வீரன் அஷ்டோத்திரம்


1
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிவாய போற்றி


2
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹேச்வராய போற்றி


3
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சம்பவே போற்றி


4
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பினாகிநே போற்றி


5
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சசிசேகராய போற்றி


6
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வாம தேவாய போற்றி


7
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய விரூபாக்ஷõய போற்றி


8
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கபர்தினே போற்றி


9
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய நீலலோஹிதாய போற்றி


10
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சங்கராய போற்றி


11
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சூலபாணயே போற்றி


12
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கட்வாங்கிநே போற்றி


13
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய விஷ்ணுவல்லபாய போற்றி


14
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிபி விஷ்டாய போற்றி


15
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அம்பிகா நாதாய போற்றி


16
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்ரீ கண்டாய போற்றி


17
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பக்த வத்ஸலாய போற்றி


18
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பவாய போற்றி


19
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சர்வாய போற்றி


20
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய திரிலோகேசாய போற்றி


21
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிதிகண்டாய போற்றி


22
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சிவாப்ரியாய போற்றி


23
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய உக்ராய போற்றி


24
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கபாலிநே போற்றி


25
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய காமாரயே போற்றி


26
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அந்தகாஸுர ஸூதநாய போற்றி


27
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கங்காதராய போற்றி


28
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய லலாடாக்ஷõய போற்றி


29
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய காலகாளாய போற்றி


30
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய க்ருபாநிதயே போற்றி


31
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பீமாய போற்றி


32
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரசுஹஸ்தாய போற்றி


33
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ம்ருகபாணயே போற்றி


34
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜடாதராய போற்றி


35
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கைலாஸவாஸிநே


36
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கவசிநே போற்றி


37
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கடோராய போற்றி


38
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய திரிபுராந்தகாய போற்றி


39
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வ்ருஷாங்காய போற்றி


40
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வ்ருஷபாரூடாய போற்றி


41
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி


42
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸாமப்ரியாய போற்றி


43
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்வரமயாய போற்றி


44
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய த்ரயீமூர்த்தயே போற்றி


45
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநீச்வராய போற்றி


46
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸர்வஜ்ஞாய போற்றி


47
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரமாத்மநே போற்றி


48
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி


49
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹவிஷே போற்றி


50
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய யக்ஞ மயாய போற்றி


51
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸோமாய போற்றி


52
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பஞ்வக்த்ராய போற்றி


53
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸதாசிவாய போற்றி


54
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய விச்வேச்வராய போற்றி


55
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வீரபத்ராய போற்றி


56
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கணநாதாய போற்றி


57
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ப்ரஜாபதயே போற்றி


58
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹிரண்ய ரேதஸே போற்றி


59
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய துர்தர்ஷாய போற்றி


60
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரீசாய போற்றி


61
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிசாய போற்றி


62
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநகாய போற்றி


63
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய புஜங்கபூஷணாய போற்றி


64
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பர்க்காய போற்றி


65
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிதன்வநே போற்றி


66
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கிரிப்ரியாய போற்றி


67
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய க்ருத்தி வாஸஸே போற்றி


68
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய புராராதயே போற்றி


69
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மகவதே போற்றி


70
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ப்ரமதாதிபாய போற்றி


71
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ம்ருத்யுஞ்ஜயாய போற்றி


72
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸூக்ஷ்மதனவே போற்றி


73
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜகத்வ் யாபினே போற்றி


74
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஜகத் குரவே போற்றி


75
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய வ்யோமகேசாய போற்றி


76
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹா ஸேந ஜநகயா போற்றி


77
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சாருவிக்ரமாய போற்றி


78
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ருத்ராய போற்றி


79
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பூதபூதயே போற்றி


80
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸ்தாணவே போற்றி


81
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அஹிர் புதன்யாய போற்றி


82
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய திகம்பராய போற்றி


83
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அஷ்டமூர்த்தயே போற்றி


84
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அநேகாத்மநே போற்றி


85
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸாத்விகாய போற்றி


86
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சுத்த விக்ரஹாய போற்றி


87
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய சாச்வதாய போற்றி


88
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய கண்டபரசவே போற்றி


89
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அஜாய போற்றி


90
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பாசவிமோசகாய போற்றி


91
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ம்ருடாய போற்றி


92
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பசுபதயே போற்றி


93
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய தேவாய போற்றி


94
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய மஹாதேவாய போற்றி


95
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யயாயே போற்றி


96
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹரயே போற்றி


97
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பூஷதந்தபிதே போற்றி


98
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யக்ராய போற்றி


99
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பகதேத்ரபிதே போற்றி


100
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய தக்ஷõத்வரஹராய போற்றி


101
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹராய போற்றி


102
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அவ்யக்தாய போற்றி


103
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஹஸஸ்ராக்ஷõய போற்றி


104
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய ஸஹஸ்ரபதே போற்றி


105
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அபவர்க்கப்ரதாய போற்றி


106
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய அனந்தாய போற்றி


107
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய தாரகாய போற்றி


108
ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய பரமேச்வராய போற்றி





3 comments:

  1. Arputham...naan neenda naatkal thediya varam kidaithathu pondru unarhiren

    ReplyDelete
  2. எந்த கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. Naan thediya pokkisham... migavum payanullathu.. Nandri...

    ReplyDelete

Powered by Blogger.