Header Ads

நவகிரக தோஷ பரிகாரம் - கேது

கேது தோஷம் விலக

கேது தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம். படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேது தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி

செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.

துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்து கொள்வது சிறப்பு. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று அங்குள்ள விநாயகரை அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அபிஷேக விபூதியை வாங்கி வந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரிய சித்திமாலை துதியை எப்போதும் கூறுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயில் நவகிரக கேது பகவானை வழிபடுங்கள். வசதியானவர்கள் கோமேதகக் கல் பதித்த டாலர் அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜை செய்யுங்கள்.

காளஹஸ்தி காளத்தியப்பர், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கேது பகவானை வணங்குங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்தால் கேதுதோஷ பாதிப்பு குறைந்து வாழ்க்கை கோலாகலமாகும்.

கேது துதி

பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே

நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி

குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

No comments

Powered by Blogger.