ஸ்ரீ தத்தாத்ரேயர் - 15 - தத்தாத்திரேயரும் ஏகநாத்தும்
Eknath |
தத்தாத்திரேயரின் வரலாற்றைப் படித்தால் அவருக்கு மராட்டிய
மாநிலத்தில் பக்தர்கள் அதிகம் உண்டு என்பது தெரியவரும். தத்தாத்திரேயர் யாருக்காக ஏன்
உதவி செய்வார் என்பது தெரியாது. ஆனால் தத்தாத்திரேயரின் பெருமையை விளக்கும் கதைகள்
நிறைய உள்ளன. அதில் ஒன்றே ஏக்நாத்தின் இந்தக் கதையும்.
மராட்டிய மானிலத்தில் ஸ்வாமி ஞானதேவா வழியை சார்ந்தவரும்
வராகாரி குளத்தை சேர்ந்தவருமான ஏகநாத் என்ற முனிவர் 17-18 ஆம் நூற்றாண்டுகளில் தந்தோபந்த்
என்பவருடன் வசித்து வந்தார். இருவருமே மராட்டிய மாநிலத்தில் பிறந்த அந்தனர்கல்தான்.
அந்த காலங்களில் ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் அவர் வழியில் சன்யாசப்
பாதையில் செல்வார்கள். அந்த வழியிலேயே ஏகநாத் தனது பத்தாவது வயதிலேயே ஸ்வாமி ஜனார்தனா
என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். ஏக்நாத் தீவீரமான பாடுறாங்க வித்தலாவின்
பக்தர்.ஸ்வாமி ஜனார்தனா தேவகிரி எனும் மலைப் பகுதியில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து
கொண்டு ஞானம் பெற்றவர். அவர் பிறப்பால் அந்தணர் என்றாலும் ஜாதி பேதம் பார்த்தவர் இல்லை.
அவர் தேவகோட் பகுதியில் இருந்த ஒரு முஸ்லிம் மன்னனின் அரண்மனையைக் காக்கும் வேலையில்
இருந்தார். கூடவே தியானமும் செய்து வருவார். அவர் தியானத்தில் அமர்ந்து உள்ள போது எந்த
காரணத்தைக் கொண்டும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறி
விடுவார். அவர் தியானத்தில் இருக்கும்போது அவருக்கு ஏகநாத் காவலுக்கு நிற்பார்.
ஒரு முறை அந்த முஸ்லிம் மன்னனின் அரண்மனை மீது வேறு நாட்டவன்
படையெடுத்து வந்தான். அப்போது ஜனார்தனா தியானத்தில் இருந்தார். எதிரிகளின் படைகளோ வேகமாக
முன்னேறிக் கொண்டு வந்தன. ஆனால் தியானத்தில் அமர்ந்து உள்ள குருவை எழுப்புவது மிகப்
பெரிய குற்றம் என எண்ணிய ஏகநாத் குருவை மனதில் தியானித்தார். அவரை மானசீகமாக வணங்கி
விட்டு யுத்த உடைகளை அணிந்து கொண்டு எதிரிகளின் படையுடன் மோதினார். அப்போது அந்த யுத்தத்தில்
அவர் பக்கத்தில் குதிரையில் அமர்ந்து இருந்தபடி வேறு ஒரு வீரனும் ஆக்ரோஷமாக எதிரிப்
படையினருடன் சண்டை இட்டபடி அவர்களை துவம்சம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டார். யுத்தம்
முடிந்தது. எதிரிப் படைகள் தோற்று ஓடின. தியானத்தில் இருந்து கண் விழித்த ஏகநாத் குருவிடம்
நடந்த விவரங்களைக் கூறி தன்னுடன் ஒரு வீரன் பக்க துணையாக இருந்து எதிரிகளை எப்படி துவம்சம்
செய்தான் என்பதையும் விளக்கினார். அதைக் கேட்ட எகநாத்தின் குருநாதர் அவர் பக்கத்தில்
இருந்தவாறு போர் புரிந்த வீரன் வேறு யாருமல்ல அவர் தத்தாத்திரேயரே என்பதை விளக்கிக்
கூறினார்.
இன்னொரு முறை ஏகநாத்துக்கு இன்னொரு சம்பவம் நடந்தது. தத்தாத்திரேயர்
தன்னுடன் சில நாய்களையும் வயதான ஒரு பெண்மணியும் அழைத்துக் கொண்டு ஒரு பகீர் உருவில்
வந்து ஏகநாத்தை தன்னுடன் வந்து உணவு அருந்துமாறு அழைத்தார். ஆனால் ஏகநாத்தோ ஆசார பிராமணரான
தன்னால் எப்படி ஒரு முஸ்லிம் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட முடியும் என்று எண்ணிக்
கொண்டு சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்த குருநாதரைப் பார்க்க அவரோ முஸ்லிம் உருவில்
வந்துள்ளவர் தத்தாத்திரேயரே என ஜாடைக் காட்டினார். அதைக் கேட்டு அதிசயித்த ஏகநாத் திரும்பி
அந்த பகீரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. மாயமாக மறைந்து விட்டார். ஏகநாத் என்ற தனி
மனிதருக்கு தத்தாத்திரேயர் ஏன் அப்படிக் கருணைக் காட்டினார் என்று நினைத்தால் அதற்குக்
காரணம் தத்தோத்பவாவின் வாழ்கையில் தெரியும்.
Our Sincere Thanks to
Santhipriya
https://santhipriyaspages.blogspot.in/
No comments