Header Ads

குருபெயர்ச்சி - ஓர் அறிமுகம் -2


ஜென்ம குரு என்றால் என்னஎன்ன செய்யும்?

ஒருவருடைய ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதைத் தான் ஜென்ம குரு என்கிறோம். அப்போது அவர் சிரமங்களை கொடுப்பார். ஆனால்இந்தப் பெயர்ச்சியில்கடகத்தில் குரு உச்சமாக வந்து அமர்கிறாரேஅப்படி உச்ச குருவாக வந்தாலும்கடக ராசிக்காரர்களுக்கு கடைசி இரண்டுமூன்று மாதங்கள் சிரமமாகத்தான் இருக்கும். குரு சாத்வீகமானவர் மட்டுமல்ல. மிகவும் கண்டிப்பான வரும் கூட. கொஞ்சம் முடக்கிப் போட்டு முன்னேற்றம் அளிப்பார். உயிருக்கு உயிரான நண்பரின் இன்னொரு முகத்தை காண்பித்துக் கொடுப்பார்குரு. பொதுவாகவே ஒருவருக்கு ஜென்மத்தில் வரும் போது முகம் வாடும். எதையோ இழந்ததைப் போலவும்எல்லாம் இருந்தும் இல்லாததைப்போன்ற மனநிலை உண்டாகும். பொறுமையை சோதிப்பார். அதனாலேயே பதட்டமும் பயமும் கூடுதலாகவே இருக்கும்.

அப்பொது என்னதான் செய்ய வேண்டும்முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்கி சிக்கிக் கொள்ளக் கூடாது. படாடோபம்பகட்டுத்தனம்ஆடம்பரப் பேச்சைத் தவிர்த்திட வேண்டும். குரு எனும் ஆசியரிருக்கு அடங்கிப் போனால் தானே நல்லது! 49 மதிப்பெண்கள் எடுத்தவருக்கு 50 போடுபவரும் குருதான். ஆனால் குறுக்கு வழியில் நியாயமற்ற விஷயங்களில் இறங்கினால்பிரம்பெடுத்து விளாசவும் செய்வார். அடிப்படை தர்மம்மனசாட்சிப்படி நடந்து கொள்கிற வரை ஜென்ம குரு பாதிப்பதில்லை. ராசிக் கட்டத்தை ஒரு வயல் என்று வைத்துக் கொண்டால்ராசிக்குள் குரு வரும் போது அந்த வயலின் மண்ணின் தன்மையை மாற்றி விடுவார். நச்சுத்தன்மையை அழித்து விடுவார். இதே போல ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வரும் போது கூட கொஞ்சம் பாடாய் படுத்தும். இதையே ஆறாக்கும் வேறாக்கும் கூறாக்கும் குடி ஒட்டும்” என்கிற பழமொழி விளக்குகிறது. முந்தைய பெயர்ச்சியி;ல் மகர ராசிக்காரர்கள் அந்த நிலையை அனுபவித்தார்கள். இந்தப் பெயர்ச்சியில் கும்ப ராசி அன்பர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் வீண் பழிகள் வந்து சேரும்.

கோச்சார குரு என்றால் என்னகோச்சார குருவினால் வரும் பலன்களுக்கும் தனி மனித ஜாதகத்திலுள்ள குரு வினால் அளிக்கப்படும்.பலன்களுக்கும் தொடர்பு உண்டா?

கோச்சாரம் என்றாலே வருடாந்திர பெயர்ச்சிகளே ஆகும். அதாவதுகுரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு வருடா வருடம் பெயர்வதை கோச்சார குரு என்பர். இப்படிப் பெயரும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் பலன்களே கோச்சாரப் பலன்கள். இதற்கும் ஒருவரின் சொந்த ஜாதகத்திலுள்ள குருவினால் ஏற்படும் பலன்களுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. ஒருவரின் சொந்த ஜாதகத்தில் குரு மிக நல்ல இடத்தில் இருந்து கோச்சார ரீதியாக அவர் பலவீனமாக இருந்தால் சுமாரான பலன்களே கிடைக்கும். கோச்சார ரீதியாகவும்ஜாதக ரீதியாகவும் குரு மோசமாக இருந்தால் சிரமங்கள் அதிகமாகும். எனவேஜாதக ரீதியான குருவைப் பொறுத்தே கோச்சார ரீதியான குருவின் பலன்களும் அமையும்.
குரு தசைகுரு புத்திகுரு அந்தரம் என்றால் என்ன?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதிபதி உண்டு. அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் ஆதிக்கத்தில் வரும் தசையே நடைபெறும்.

தசா என்றால் உடலின் தசையையும்புக்தி என்றால் மனம் மற்றும் புத்தியையும்அந்தரம் என்றால் அந்த கணத்தில் உங்கள் நிலையையும் வெளிப்படுத்தும் அம்சங்களாகும். இப்போது ஒருவருக்கு குருதசை நடந்தால் அவர் உடலை குருவும்அதிலும் சந்திர புக்தி இருக்குமானால்மனதை சந்திரனும்அதற்குள்ளாக சுக்கிரன் அந்தரம் என்றால்அப்போதைக்கு சுக்கிரனும் கைகோத்துக் கொள்ளஅவர் வாழ்க்கையை நடத்துகிறார் என்று அர்த்தம்.

புனர்பூசம் விசாகம்பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் குருதசையே நடைபெறும். இவரே அந்த உயிரின் அடிப்படை தன்மைகளை தீர்மானிப்பவராக இருப்பார். இது போல வௌ;வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு அந்தந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் முதலில் வரும். இந்த குரு தசையை அடுத்து சனி தசைபுதன் தசைகேது தசைசுக்கிர தசை என்று தொடரும். அதே சமயம் எந்த தசையானாலும் அதையும் ஒன்பதாக பிரித்து கிரகங்கள் ஆளும். குரு தசைக்குள் குரு புக்திகுரு புக்திக்குள் இன்னும் ஆழமாகப் போய் அந்தரம் வரை குருவின் ஆட்சி நடக்கும். சனி தசைக்குள் குரு புக்தி அதற்குள் குரு அந்தரம் என்பது வரை தொடரும்.

இப்பொழுது குரு பெயர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் குரு தசைகுரு புக்திகுரு அந்தரம் வரை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மாற்றங்களை கொடுக்கத்தான் செய்யும். ஜாதகத்திலுள்ள குரு என்பது கொஞ்சம் அழுத்தமான பதிவு. இதுவொரு முத்திரைக்கும் சமானமானது. குரு தசை என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு ஜாதகரின் மீது குரு என்கிற கிரகம் ஏற்படுத்தும் பாதிப்புகுரு புக்தி என்பது கலங்கரை விளக்கம் போன்றது. எந்த தசை நடந்தாலும் நவகிரகங்கள் தங்களுக்குள் குறிப்பிட்ட மாதங்கள் ஜாதகரின் மீது ஆதிக்கம் ;செலுத்தி விட்டு நகர்ந்து விடும். அந்தரம் என்பதும் இப்படித் தான். சில நாட்கள் இருந்து விட்டு நகர்ந்து விடும். இதற்கு நடுவே பெயர்ச்சி வரும் போது ஒரு வருட காலத்திற்கு குரு பகவான்எந்த தசை நடந்தாலும் தன்னுடைய தாக்கத்தை நல்லதாகவோ கெட்டதாகவோ ஏற்படுத்துவார். இதற்கு உறுதுணையாக ஜாதகத்திலுள்ள குருகுரு தசைகுரு புக்திகுரு அந்தரம் வரை பல்வேறு பரிமாணங்களில் குருவின் இடத்தைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.

குரு எனும் வார்த்தைக்கு இரண்டு எழுத்துகள்தான். ஆனால்இந்தியாவை ஆன்மிக பூமியாக அடையாளப்படுத்துவது இந்த ஒரு வார்த்தைதான். ‘‘கோவிந்தன் கைவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால்,

குரு கைவிட்டால் வழியே இல்லை’’ என்று கபீர்தாசர் கூறுவார். குரு என்றால்இருட்டைப் போக்குபவர்கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்கிறார்கள்.

குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம். நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குருஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள்வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன. 

No comments

Powered by Blogger.