Header Ads

குருபெயர்ச்சி - தென்குடித் திட்டை - குரு ஸ்தலம் - 2


திட்டையில் வழிபட்டால் தீங்குகள் ஒழியும்

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே’ தஞ்சை அடுத்த திட்டையில் பிரசித்தி பெற்ற வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 15வது தலம்.  கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 78 வது தலம். புத்திகாரகர்தனகாரகர் என்று கருதப்படும் குருதங்கத்துக்கும்,  தனத்துக்கும் அதிபதி. பக்தர்களின் தோஷங்களை நீக்கி உலகியல் இன்பங்களை  வழங்குபவர் என்பது ஐதீகம்.வசிஷ்ட முனிவர் தவம் புரிந்து வழிபட்டதால்திட்டை கோயில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பிரளய காலத்திலும்  மூழ்காமல் இந்த இடம் திட்டாக (மேடு) இருந்ததால்ஊரின் பெயர் திட்டை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இறைவியின் பெயர் உலகநாயகி என்ற  மங்களாம்பிகை. பெண்கள் துயர் தீர்ப்பதில் முதல்வி.

சிவனின் ஆலயமாக இருந்தாலும் இங்குள்ள சக்கர தீர்த்தம்மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு தேவர்கள் மரம்,  செடிகொடிகளாகப் பிறந்து இறைவனை வழிபடுகின்றனர். ருத்ரன் ஆல  மரமாகவும்விஷ்ணு அரசமரமாகவும்பிரம்மன் பூவரசு மரமாகவும் தோன்றியுள்ளனர்  என்றும் தல புராணம் கூறுகிறது. ஆனால்வில்வ மரம்தான் தல விருட்சம். கொடி மரம் முதல் விமானக் கலசம் வரை அனைத்தும் கருங்கல்லால் ஆனவை. இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்விசெல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம். திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம்சுவாதிஷ்டானம்மணிப்பூரகம்அனாகதம்விசுத்திஆக்ஞைசகஸ்ராரம் என்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார்.  இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும்உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார். 

இக்கோயிலுக்கு வந்து வழிபடாத  தெய்வங்களோதேவர்களோ இல்லை என்று கூறலாம். முழு முதல் கடவுள் விநாயகர்  முதல் முருகன் வரை பல்வேறு தெய்வங்கள் வசிஷ்டேஸ்வரரைத் தொழுதுள்ளனர்.  தேவர்களில் இந்திரன் முதற்கொண்டு அஸ்வினி தேவர்கள் வரை  வழிபட்டு வரம்  பெற்றுள்ளனர். எமதர்மராஜா இங்கு வந்து சாபம் நீங்கப் பெற்றுள்ளார். நவகிரக  நாயகன் சூரியன் இத்தலத்தில் வணங்கி கிரக நாயகனாக உயர்வு பெற்றுஉலகைப்  பிரகாசப்படுத்தும் சக்தியைப் பெற்றுள்ளார். சந்திரனுக்கும்  அவரது மாமனார் தட்ச பிரஜாபதியால் சாபம் வந்தது. சாபத்தால்அவர் தினம் ஒரு  கலையாக தேய்ந்து அழிந்துகொண்டிருந்தார். திங்களூர் வந்து வழிபட்ட சந்திரனை  சிவன் தலையில் சூடி அவர் சாபம் நீங்க உதவினார். அதற்கு நேர்த்திக்கடனை  சந்திரன் திட்டையில் வந்து செலுத்தினார்.  சனி  பகவானுக்கும் ஒரு சமயம் சாபம் வந்தது.

தன் சாபம் நீங்கவும்தனக்கு  ஒரு  அங்கீகாரம் வேண்டியும் சனி பகவான் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை நினைத்து  ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். தவத்துக்கு இரங்கிய சிவபெருமான்  அவர் முன் தோன்றி  சாபம் நீக்கி நவக்கிரகங்களில் ஒருவராக அமர்த்தினார். அது  முதல் சனிபகவான் இக்கோயிலில் மங்கள மூர்த்தியாக அனுக்கிரகம் செய்து  வருகிறார். ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் ராஜாவாக விளங்கியும்  பரந்தாமனின் பாம்புப்படுக்கையாகவும் விளங்கி வரும் ஆதிசேஷன் ஆயிரம்  தலைகளையும்பூவுலகைத் தாங்கும் திறனையும் திட்டைக்கு வந்து வழிபட்டு  பெற்றார் என்று தலவரலாறு கூறுகிறது. நவக்கிரகங்களில் சுப கிரகம் குருபகவான். சுவாமிக்கும்அம்பாளுக்கும்  ,இடையில் தனி சன்னதியில்தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி  திட்டையில் அருள்பாலிக்கிறார்.

வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு நீர்  நேராக சிவனின் பாண லிங்கத்தின் உச்சியில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பிரியனான சிவனுக்கு சதாசர்வ காலமும் அபிஷேகம் இயற்கையாக இங்கு அற்புதம் நிகழ்கிறது.வரும் 5ம் தேதி குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பிரவேசிக்கிறார். குருப் பெயர்ச்சியை  முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பரிகார ஹோமம் ஆகியவை குரு  பரிகாரத் தலமான இக்கோயிலில் நடக்கிறது.  ஒருவருடைய ஜென்ம ராசியிலிருந்து 2,5,7,9,11 ஆகிய இடங்களில் குருபகவான் வரும் போது நற்பலன்கள் நடக்கும். ஜென்மராசியான 1ம் இடம் மற்றும் ஜென்மராசியில் இருந்து 3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சரிக்கும் போது நற்பலன்களைத்தர மாட்டார் என்பது பொது விதி.

நேரில் வர முடிந்தவர்கள் லட்சார்ச்சனைக்கு கட்டணம் ரூ.300, குரு பரிகார ஹோம கட்டணம் ரூ.500 செலுத்தி பரிகார ஹோமங்களில் பங்கு பெறெலாம். நேரில் வர முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு கட்டணம் ரூ.300, பரிகார ஹோமத்திற்கு ரூ.500 மணியார்டர் அல்லது டி.டி எடுத்து நிர்வாக அதிகாரிவசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்திட்டைதஞ்சாவூர் மாவட்டம் - 613 003 என்ற முகவரிக்கு தங்கள் நட்சத்திரம்ராசி லக்னம் ஆகிய முழு விபரங்களுடன் தங்கள் சரியான முகவரியையும் அனுப்பினால் ஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரசாதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர்குருபகவான் படம்ஹோமம் அஞ்சனம்(மை)தோஷம் நீக்கும் மஞ்சள் கயிறு ஆகியவை அனுப்பி வைக்கப்படும். தொலைபேசி எண்: 04362-252858.

தென்குடி திட்டை

திட்டை என்பது  திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால்  சூழப்பட்டது. ஓம் என்ற மந்திர ஓடத்தில் இறைவன்இறைவி இருவர் மட்டும் ஏறி  வரஅது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம். ஆதி காலத்தில் இறைவன்  விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு  தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.  மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே  திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர  ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும்சீர்காழி வடகுடி  திட்டை எனவும் வழங்கலாயிற்று.

மாணவர்கள் வழிபாடு

இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் குருபகவான் ராஜகுருவாக இருக்கிறார்.இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை. குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றிகல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு வந்து குருபகவானை வழிபடுகின்றனர்.

No comments

Powered by Blogger.