Header Ads

குருபெயர்ச்சி - தென்குடித் திட்டை - குரு ஸ்தலம் - 1


திட்டைக்கு வந்தால் குரு பலம் நிச்சயம்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித் திட்டை திருத்தலம். எல்லோரும் திட்டை என்றுதான் சொல்கிறார்கள். திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள். பக்தர்களாகிய நம்மைமேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதைஇப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டுசூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார். அவர் மட்டுமாநமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருளக் காத்திருக்கிறார்குரு பகவான்!

ஒரு கோயிலில்கோபுர வாசல் வழியே உள்ளே வந்துபலிபீடம்கொடிமரம்நந்தியெல்லாம் கடந்துமகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டேஅங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியேகருவறைக்கு அருகில் வருவோம். அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர். அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோயில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோயில் குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனால்அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்துமக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்துகோயிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார். தமிழ் கூறும் நல்லுலகில்இப்படி பரிவாரக் கடவுளேபரிகாரக் கடவுளாகவும்பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில்திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கேமக்களின் மனங்களில் இடம் பிடித்தகுரு பகவானே உண்மையான ஹீரோ. தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில்திட்டையும் ஒன்று. சொல்லப்போனால்முக்கியமான தலமும் கூட!

புராதனப் பெருமை!

திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஆகபாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறதுதிட்டை. ஆனால்திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார்என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரியபுராணத்தில் குறிப்பிடப்படவில்லை.

இந்தத் தலத்தின் பெருமைகளைஸ்ரீலோகநாயகி சமேத ஸ்வயம்பூதேஸ்வரர் புராணக்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. சோழ தேசத்தின் மிகத் தொன்மையானஅழகியஅற்புதமான ஆலயங்களில்தென்குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!

சுயம்புலிங்கம்!

இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனிசுயம்பு மூர்த்தம். ஆம்ஸ்வாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர். திருக்கயிலாயம்புண்ணியமிகு காசி க்ஷேத்திரம்திருக்காஞ்சிதில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் முதலான பல க்ஷேத்திரங்களில் சிவனார்மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாகதானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள். அந்த வகையில்சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ ஸ்தலங்களில் 22&வது திருத்தலம் தென்குடித்திட்டை.

தலம்தீர்த்தம்மூர்த்தம் -  விசேஷங்கள்

பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆஸ்ரமம் அமைத்துஇறைவனை வழிபட்டுதவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

வசிஷ்ட முனிவர்க்ருதயுகத்தில் பலாஸவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார்இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர்திரேதா யுகத்தில்... இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில்சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

துவாபர யுகத்தில்வில்வவனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

அதேபோல்தீர்த்தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் போற்றப்படுகிறது. தென்குடித் திட்டை தலத்தில்பசு தீர்த்தம்சூல தீர்த்தம்சக்கர தீர்த்தம் ஆகியவை உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானதுநம் சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது என்கிறது ஸ்தல புராணம்.

சூல தீர்த்தமானதுசிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்துசிவனாரின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ளச் செய்யும் வல்லமை கொண்டது.

திருமால்தன் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதே சக்கர தீர்த்தம். ஸ்ரீசக்கரத்தின் வலிமையையும் மகிமையையும் நாம் அறிவோம். அதற்கு இணையாக இருந்து சர்வ வல்லமைகளையும் தரவல்லதுதீயசக்திகளை அழித்து சகல யோகங்களும் தரக்கூடியது இந்த சக்கர தீர்த்தம் என்று போற்றுகிறார்கள் ஞானிகள்.

அடுத்து... மூர்த்தம்! புராணங்களிலும் புராதனக் குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் ஸ்வாமிக்கு இருக்கிற ஏகப்பட்ட திருநாமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீதட்சிண குடீத்வீப க்ஷேத்திரேஸ்வரர் என்று திருநாமம் ஈசனுக்கு. அதாவது தென்குடித் திட்டை தலத்தின் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் சிவனார்.

சுயம்பு மூர்த்தம் என்பதால்தானே தோன்றியவர் என்பதால்ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர் எனும் திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால்ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்றும் பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான்.

தவிரஸ்ரீஅனந்தீஸ்வரர்ஸ்ரீதேனுபுரீஸ்வரர்ஸ்ரீரதபுரீஸ்வரர்ஸ்ரீநாகநாதர்ஸ்ரீநாகேஸ்வரர் எனும் பெயர்களும் திட்டை சிவனாருக்கு உண்டு என்கின்றன குறிப்புகள். ஆனால் இன்றைக்கு ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம் என்றே அரசாங்கக் கோப்புகளிலும் பக்தர்களின் மனங்களிலும் இருக்கின்றன.

அதேபோலஅம்பாளுக்குஉமையவளுக்குஸ்ரீலோகநாயகி என்றும் ஸ்ரீசுகந்த குந்தளேஸ்வரி என்றும்ஸ்ரீமங்களேஸ்வரிஸ்ரீமங்கலநாயகி என்றும் திருநாமங்கள் உள்ளன.

அண்ணனுக்கும் தம்பிக்கும் முக்கியத்துவம்

தலம்தீர்த்தம்மூர்த்தம் என்று பெருமைகள் கொண்ட அற்புதமான க்ஷேத்திரம் இது. இந்தத் தலத்தில்சிவ மைந்தர்களான அண்ணன் விநாயகப் பெருமானுக்கும் தம்பி முருகக்கடவுளுக்கும் முக்கியத்துவம் உண்டு.

அதாவது கணபதியை வணங்கி பலன் பெற்ற கதையும் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற சரிதமும் இந்தத் தலத்தின் கூடுதல் விசேஷங்கள். இந்திரன்இந்தத் தலத்தின் ஸ்ரீபுஷ்டி விநாயகரை வழிபட்டு அருள்பெற்றான். தவிரஅகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து காவிரியை வெளிக்கொண்டு வருகிற ஆற்றலையும் பெற்றான். தேவர்களும் மகாவிஷ்ணுவும் விநாயகப்பெருமானை வணங்கி வழிபட்டுஅருள் பெற்ற தலம் இது!

ஸ்ரீமுருகப்பெருமான்இங்கே ஞானம் அருளும் வல்லமையுடன் திகழ்வதாகச் சொல்கிறது புராணம். இன்னும் சொல்லப்போனால்தென்குடித்திட்டை எனும் திருநாமம்இந்த ஊருக்கு வந்ததற்குக் காரணமே முருகக்கடவுள்தான் என்கின்றன புராணங்கள்.

அதாவதுதிட்டை என்பது மேடு. ஞானமேடு. தென்குடி என்பது மனித உடல். மூலாதாரம்சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுக்திஆக்ஞை என ஆறு ஆதாரங்களைக் கொண்ட மனித உடல்ஆறுபடைவீடுகளையும் கொண்ட ஆறு முகங்களையும் கொண்ட கந்தக் கடவுளால் அருள்ஞானம் கிடைக்கப்பெறும் தலமாக வணங்கப்படுகிறது இங்கே!

அம்பாளின் அருளாடல்

சுகந்த குந்தளா என்பவள்சிவ பக்தை. இறந்த தன் கணவனுக்கு மீண்டும் உயிர் வரவேண்டும் என அம்பிகையிடம் மன்றாடினாள். அவளின் சிறந்த பக்தியால்அவளுக்கு தாலி பாக்கியத்தைத் தந்தருளினாள் அன்னை.

இந்தத் தலத்தின் நாயகியான ஸ்ரீலோகநாயகியைமங்களா என்பவள்அனுதினமும் வழிபட்டு வந்தாள். அவளின் பக்தியால் குளிர்ந்து போன அம்பிகைஅந்த விதவைக்கு அருளினாள். இழந்த கணவனையும் சுமங்கலித்தன்மையையும் மீண்டும் தந்துசகல ஐஸ்வரியங்களுடன் வாழச் செய்தருளினாள்.

ஆகஇந்தத் தலத்துக்கு வந்து வேண்டிச் செல்லும் பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்கிறாள் உமையவள். தீராத நோயால் அவதிப்படும் கணவனைக் கொண்டகவலையுடன் குடித்தனம் நடத்துகிற பெண்கள்இங்கு வந்து அம்பிகையை மனதார வழிபட்டால்மங்கல வாழ்வு தருவாள் தேவி என்கின்றன புராணங்கள்.

மகரம் ஆடுங்கொடி மன்மத வேள்தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும் சிகர மாளிகை தொகும் தென்குடித் திட்டையே! என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

அதாவதுமீன் கொடியை வைத்திருப்பவன் மன்மதன். அவனை தன் பார்வையால் சுட்டெரித்தவன் குடிகொண்டிருக்கும் தலம் என்று தென்குடித்திட்டையைச் சொல்கிறார். ஒளி கொடுக்கிற சந்திரனும் நட்சத்திரங்களும் வந்து ஆசையுடன் உட்கார்ந்து கொள்ளும் ஒப்பற்ற இடமாம் தென்குடித்திட்டை!

இன்னும் இன்னுமாக இதுபோன்ற பதிகங்களால் சிவனாரைப் பாடிப் பரவசமாகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

எமன் வழிபட்ட திட்டை

அன்னையின் சாபத்துக்கு ஆளாகிறான் எமன். 'எந்தக் காலைத் தூக்கி அவமரியாதை செய்தாயோஅந்தக் கால் உன்னிலிருந்து துண்டித்து விழட்டும்எனச் சபித்தாள் அன்னை. தந்தையிடம் நடந்ததைச் சொல்லி அழுதான். 'தெய்வத்துக்கு நிகரானவள் அன்னை. அவளின் வாக்குதெய்வ வாக்கு. என்னிடம் முறையிட்டுப் பலனில்லை. பரமனைத் தொழுதால்பாவத்தில் இருந்தும் சாபத்தில் இருந்தும் விடுபடுவாய்என்கிறார் தந்தை சூரியனார்.

'வேதங்களின் நாயகனாகவேதநாயகனாகத் திகழும் ஈசன் குடிகொண்டிருக்கும் தென்குடித்திட்டை க்ஷேத்திரத்துக்குச் சென்றுசிவனாரை வழிபடுவாயாக!என்கிறார் தந்தை.

அதையடுத்துதிட்டை திருத்தலத்துக்கு வந்த எமன்சிவனாரின் ஏகாக்ஷரம் எனப்படும் ஓரெழுத்து மந்திரத்தை ஜபித்து வணங்கினான். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடும் தவம் புரிந்தான். அதில் மகிழ்ந்த சிவனார்எமனாரின் சாபத்தை நீக்கியருளினார். சாபவிமோசனம் அளித்தார். எந்த மந்திரத்தைச் சொல்லி எமன் ஜபித்தானோஅந்த மந்திரத்தின் தேவதையாக்கினார் சிவனார்.

இதனால் புதிய தேஜஸைப் பெற்றான் எமன். அவன் கால்கள் சரியாகின. தெற்குத் திசைக்கு அதிபதியாகத் திகழ்ந்தான். இந்திரனுக்கு நிகரானவன் எனப் போற்றப்பட்டான். மக்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பபலன்களைத் தரும் வல்லமையைப் பெற்றான். தர்மராஜனாகத் திகழ்ந்தான். எமதருமராஜனாக இன்றைக்கும் அருளிவருகிறான்.

எம பயம் போக்கும் திட்டை

தென்குடித் திட்டைக்கு வந்து எவர் வேண்டி வணங்கினாலும்அவர்களுக்கு எமபயம் விலகிவிடும். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

சிறுவயது முதலே நோயால் அவதிப்படுபவர்கள்மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்பவர்கள்எப்போதும் ஏதேனும் ஒரு வியாதியால் அவஸ்தைப்படுபவர்கள்இங்கு வந்து சிவனாரையும் தேவியையும் வஸ்திரம் சார்த்தி வேண்டிக் கொண்டால் போதும். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்துமுடிந்தால் பரிகார ஹோமமும் செய்து வழிபட்டால் போதும். சகல வளத்துடன் நோய் நொடியின்றி வாழலாம். ஆயுள் பலம் பெருகும். ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உறுதி!

சனி பகவான் அருள் பெற்ற திட்டை

தாயாரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காகதந்தையின் சொல்படி எமதருமன் வந்துகடும் தவம் செய்து வழிபட்டுசிவபெருமானின் அருளைப் பெற்று தருமராஜன் எனும் பதவியைப் பெற்றான் அல்லவா.

அதேபோலதந்தையின் ஆணைப்படி சனி பகவானும் திட்டை திருத்தலத்துக்கு வந்தார். சிவனாரை நோக்கி தவமிருந்தார். நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டிருப்பது போலவேவேத நெறி பிறழாமல்சிவ பூஜையில் லயித்தார்.

சுமார் ஆயிரம் வருடங்கள் சிவனாரை நினைத்து பூஜை செய்தார். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துதவத்தில் மூழ்கிக் கிடந்தார். முழுவதுமாக தன்னையும் தன் எண்ணங்களையும் சிவபாதத்தில் ஒப்படைத்துசரணடைந்தார். அதன் விளைவாக, சிவனார் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவி தந்து அருளினார்.

நவக்கிரகங்களில் ஒருகிரகம் - சனி கிரகம். அதிலும் கிரகங்களுக்கெல்லாம் நாதனாகத் திகழ்கிற பாக்கியமும் கிடைத்தது சனிபகவானுக்கு.

பதவி உயர்வு நிச்சயம்

எதிர்ப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் பதவியும் கிடைக்கலைஉயர்வும் இல்லை. உரிய ஊதியமும் தரலை என்று எதிர்பார்த்து ஏங்குபவர்கள்உங்கள் குறைகளை சிவனாரிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். அப்படியே குரு பகவானிடம் வேண்டிக் கொண்டுகுரு பலத்தையும் பெற்றுநினைத்தபடி பதவிஉயர்வுஊதியம் ஆகியவற்றைப் பெற்று அமோகமாக வாழ்வீர்கள்.

அதுமட்டுமாஆத்மார்த்தமாக சிவனாரையும் தேவியையும் வேண்டுங்கள். இழந்த பதவியைப் பெற்று இனிதே வாழ்வீர்கள் என்பது உறுதி.

No comments

Powered by Blogger.