Header Ads

குருபெயர்ச்சி பலன்கள் 2017 - 2018 - பொது பலன்கள் - 2


குரு ஸ்தோத்திரம்

தேவானா ம்ச ரிஷினாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரி லோகேசம்
தம் நமாமி பிரகஸ்பதிம்.
குரு காயத்ரி
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்

ஓம் பரவரஸாய வித்மஹே
குரு வ்யக்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் குரு தேவாய வித்மஹே
பரம குருப்யோ தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் குரு தேவாய வித்மஹே
பரப்ரம்மாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

ஓம் ஆங்கிராய வித்மஹே
சுரசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.

மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018

ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம் (தங்கம்) ரஜதம் (வெள்ளி), தாமிரம் (செம்பு) மற்றும் உலோகம் (இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்.

கிரகப் பெயர்ச்சியன்று 

ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.
  
குரு இம்முறை பொது விதிப்படி கன்னி (2), தனுசு (11), கும்பம் (9), மேஷம் (7), மிதுனம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார். ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம். 

சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம். 

கன்னி-ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது.(2) 90%

தனுசு - சுவர்ண மூர்த்தியாவதால் அவர் நன்மை அளிக்கிறார். (11) 100%

கும்பம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9) 75%

மேஷம் - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7) 90%

மிதுனம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது  90%

சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி, தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை கடகம், சிம்மம், துலாம் விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் ரிஷபம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம் 

கடகத்திற்கு சுவர்ண மூர்த்தியாகி அசுபபலன் பெரும்பாலும் குறையும். (4) 70%

சிம்மத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (3) 60%

துலாத்திற்கு - சுவர்ண மூர்த்தியாக சுமாரான பலன்கள் ஏற்படும். (1) 70%

விருச்சிகத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%

மகரத்திற்க்கு - ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிதளவு குறையும். (10) 65%

மீனத்துக்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் குறையும். (8)60%

ரிஷபத்திற்கு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6). 70%

மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது, ரிஷபம் மற்றும் துலாம் இராசிக்காரர்களுக்கு 1, 6 மற்றும் 4 இல் சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம்.

ரிஷபம், கடகம், தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

மேஷம், கன்னி, மகரம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.


No comments

Powered by Blogger.