ஆதீன ஆலயங்கள்
ஆதீன ஆலயங்கள்
சைவ சமய மடங்கள் அல்லது சைவ ஆதீனம் என்பவை சைவ
சித்தாந்தத்தை வளர்க்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட மடாலயங்கள் ஆகும்.
இத்தகைய பல மடங்கள் 16-ஆம்
நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன.
திருவாவடுதுறை ஆதீனம்
சித்தர் சிவபிரகாசரின் மாணாக்கர் நமச்சிவாயர் 14-ஆம் நூற்றாண்டில் இதனைத் தோற்றுவித்தார்.
காஞ்சி ஞானப்பிரகாசர் மடம்
சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்பவரின் மாணாக்கர் 14-ஆம் நூற்றாண்டில் இதனைத் தோற்றுவித்தார்.
திருவையாறு செப்பறை மடம் என்னும் பீடம்
இதனை மச்சுச் செட்டியார் என்னும் மச்சுக்கறை வணிக யோகி
திருவையாற்றில் நிறுவினார். இந்தச் செட்டியார், சந்திரசேகரன் என்னும் பிராமணனுக்கு ஞானம் வழங்கியவர்.
இந்தச் சந்திரசேகரன் வழியில் திருவையாறு சாமிநாத தேசிகர் முதலான 15 ஆசாரியர் தலைமை பூண்டு ஒரு பீடம் (அறக்கட்டளை) நிறுவி மடத்தைப்
பேணிவந்தனர்.
இவர்களில் சந்திரசேகரன் தவிர பிறர் இல்லறம் பேணிய
வேளாளர்கள்.
இந்த ஒரு மடத்தைத் தவிர பிற மடங்கள் (ஆதீனம், பீடம்) துறவு பூண்டவர்களையே தலைவர்களாகக் கொண்டிருந்தன
வேளாக்குறிச்சி மடம்
பழுதைக்கட்டி சம்பந்த முனிவர் அவரிடம் ௨பதேசம் பெற்றவர் காவை
அம்பலநாத சுவாமிகளாவர். காவை அம்பலநாத சுவாமிகளிடம் ௨பதேசம் பெற்றவர் சத்திய ஞான
பண்டாரம். இவர்களின் தீட்சா நாமம் சத்திய ஞானதேசிக தீர்க்கதரிசினிகள். இவர்கள்
தி௫நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளை நகர் எனும் வேளாக்குறிச்சியில்
தாமிரவ௫ணி நதிக்கரையில் வேளாக்குறிச்சி ஆதீனத்தை நிறுவியவர்கள்
தருமபுரம் மடம்
சிற்றம்பல நாடிகள் பரம்பரையில் 5-ஆவது சீடர்
கமலை (சீர்காழி) ஞானப்பிரகாசர். கமலை ஞானப் பிரகாசரின் மாணாக்கர் குருஞான சம்பந்தர் தருமபுர
ஆதீனத்தை 16-ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தார்.
திருப்பனந்தாள் மடம்
தருமபுர ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞான சம்பந்தர்
திருப்பந்தாள் மடத்தையும் தோற்றுவித்து அதன் தலைவரானார்.
துழாவூர் மடம்
கமலை ஞானப்பிரகாசரின் மற்றொரு மாணாக்கர் நிரம்ப அழகிய
தேசிகர் இந்த மடத்தைத் தோற்றுவித்தார்.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்
மயிலம் பொம்மபுர ஆதீனம்
மதுரை ஆதீனம்
வேளாக்குறிச்சி ஆதீனம்
காஞ்சி சங்கர மடம்
பழங்காலத்தில் தத்துவஞானிகளும், துறவிகளும் தனியே ஓரிடத்தில் இருந்து யோக நெறியில் பழகுதல், கடவுள் வழிபாடு செய்தல், தத்துவ ஞான நெறியில் பழகுதல், தங்களை நாடி வருபவர்களுக்கு அறநெறியினையும் தத்துவ ஞானத்தையும் கற்பித்தல் ஆகிய பணிகளைச் செய்து வந்தனர். இம்மடங்களுள் சைவ மடங்கள் பிற்காலத்தில் சைவ ஆதீனம் என்னும் பெயரில் குறிப்பிடப்பட்டன.
பாரத நாட்டில் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இத்தகைய மடங்கள் பல இருந்தன. தமிழகத்தில் சைவ சமய நெறியில் நின்ற மடங்கள் பதினெட்டு இருந்தன. இவை பதினெண் மடங்கள் என்று அல்லது சைவ ஆதீனங்கள் பதினெட்டு என்று ஒரு தொகையாகக் கூறப்படுகின்றன. அபிதான சிந்தாமணி என்னும் நூல் சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள் என்னும் தலைப்பில் (இரண்டாம் பதிப்பு - பக்கம் - 1609 )
01. திருவாவடுதுறை
02. காஞ்சிபுரம்
03. தருமபுரம்
04. சூரியனார் கோயில்
05. ஆகம சிவப்பிரகாசாதீனம் (சிதம்பரம்)
06. செங்கோல் ஆதீனம் (பெருங்குளம், திருநெல்வேலி)
07. திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)
08. திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
09. இராமேச்சுரம் ஆதீனம்
10. நீலப்பாடி ஆதீனம் (தஞ்சாவூர்)
11. தாயுமான சுவாமிகள் ஆதீனம்
12. சாரமாமுனி ஆதீனம் (திருச்சிராப்பள்ளி)
13. சொர்க்கபுர ஆதீனம் (அம்பர் மாகாளம்)
14. வேளக்குறிச்சி ஆதீனம் (திருவாரூர்)
15. வள்ளலார் ஆதீனம் (சீகாழி)
16. வருணை ஆதீனம் (வேதாரணியம்)
17. நாய்ச்சியார் கோவில் ஆதீனம் (கும்பகோணம்)
18. நிரம்ப அழகிய தேசிகர் ஆதீனம் (மதுரை - துழாவூர்)
என்று சைவ ஆதீனங்களின் பட்டியல் ஒன்று காணப்படுகின்றது.
இவை பெரும்பாலும் அவையவை நிலையாகத் தங்கியிருந்து சைவ நெறியினை வளர்க்கும் பணியினைச் செய்த தலங்களின் பெயர்களாக அமைந்துள்ளன. சில ஆதீனங்கள் அவற்றை நிறுவிய ஆசாரியரின் பெயரில் அமைந்துள்ளன.
இன்றைய நிலையில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் , மதுரை ஆதீனம் ஆகியவை பலராலும் நன்கு அறியப்பட்ட ஆதீனங்களாக விளங்குகின்றன. பல ஆதீனங்கள் பெயரளவில் அறியப்படுவனவாக உள்ளன. இவையன்றி வீரசைவ ஆதீனங்களும் பல உள்ளன.
No comments