தேவாரத் திருத்தலங்கள்
தேவாரத் திருத்தலங்கள்
தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம்
நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில்
பாடிய 276 சிவத்தலங்கள் ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து
பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர்.
தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் இத்திருத்தலங்களை அவை
அமைந்துள்ள நாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஓர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தத்தில் பட்டியலிட்டு உள்ளார்.[2][3]
இவற்றுள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219. (+பிற்சேர்க்கை 1). இவை முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. அப்பர் என்னும்
திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125. இவை நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. சுந்தரமூர்த்தியால்
பாடப்பட்டவை 84.
இவை ஏழாம் திருமுறையில் இடம்பெற்று உள்ளன.
No comments