திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள்
திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள்
நெல்லையில் உள்ள சந்திப்பிள்ளையார், குறுக்குத்துறை முருகன் கோவில், திருவாவடுதுறை, திருநள்ளாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் திருவாவடுதுறை மடத்திற்குச்
சொந்தமான கோயில்கள் உள்ளன. குறிப்பாக திருமங்கலக்குடி, சூரியனார் கோயில், ஆகியன ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழ்நூல்கள் மற்றும் நூலகம்
இந்த ஆதீனம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை
வெளியிட்டும்,
மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன
சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம்,இலக்கணம், நாடகம், புராணம் என பலதுறை சார்ந்த பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23 ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ
பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தாரால்
மேற்கொள்ளப்பட்டது.

No comments