சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்
இராசி அறியாவதவர்கள் பலன் அறிய:
சு, செ, சே, சோ, சொ, சை, ல, லி, லு, லோ, அ, ஆ, ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக்க் கொண்டவர்களும்
சித்திரை மாத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்.
வான மண்டலத்தில் உள்ள ராசிகளில் முதல் ராசியான
நவக்கிரகங்களில் மிகவும் பலம் வாய்ந்த கிரகமான செவ்வாயின் வீட்டிற்கு உரியவரான
மேஷராசி நேயர்களே யாரையும் வசிகரிக்கும் ஆற்றலும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும்
வீரமும் அதிகமான தன்னம்பிக்கையும் உடையவர்கள் ஆவீர்கள்.
உங்கள் ராசிநாதனாக செவ்வாய் பகவான் விளங்குவதால் எதிலும்
முதன்மையானவராகவும், எதையும்
தலைமை ஏற்று நடத்தும் வல்லமையும் கொடுத்த வாக்கை காப்பாற்ற எதையும்
இழக்கத்தயாராகவும் இருப்பீர்கள். எடுத்த காரியங்களை முடிப்பதில் ஆர்வம் உடைய
நீங்கள் அஞ்சா நெஞ்சமும் தைரியமும் வீரமும், விவேகமும் உடையவர்கள்
உழைப்பு என்ற சொல்லுக்கு உதாரணமாக இருப்பவர் நீங்கள். அதே
சமயம் அதிகமான கோபமும், படபடப்பும்
யாரையும் தூக்கி எறிந்து பேசும் கர்வம் உடையவர்கள். எதிரிகளை தேடிச் சென்று பலி
தீர்க்கும் சுபாவம் உடையவர்கள். பலி தீர்க்கும் எண்ணத்தையும் கோபத்தையும்
விட்டொழித்தால் வாழ்க்கையில் உயர்நிலை அடைவீர்கள். என்பது மட்டும் நிச்சயம்.
ஏனெனில் உங்களது ராசியில் தான் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். ஆக சூரியன் உச்சம்
பெற்ற ராசிக்கு உரியவரான நீங்கள் அரசு அதிகாரம், செல்வம் செல்வாக்குடன் வலம்வர வாய்ப்புகள் ஏராளம். அதனால்
நிதானத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்நிலையை அடையலாம்.
இதுவரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவான் இதுகாரும்
சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள்
ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன்
இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். சனி பகவானுடன்
உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சொல்லெனாத் துன்பங்களை கொடுத்து வந்தார்.
இப்பேர்ப்பட்ட சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அதாவது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது
உங்களுக்கு மிகவும் நற்பலன் என்று தான் கூற வேண்டும். 9ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் தெய்வ அனுகூலத்தை
உண்டுபண்ணுவார். மேலும் உங்களது ராசிக்கு ராகுபகவான் – 5ம் இடத்திலும், குருபகவான் – 6ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் சஞ்சரிப்பது ஓரளவு நற்பலன் ஆகும்.
சனிப்பெயர்ச்சியால் இதுகாறும் உங்களுக்கு ஏற்பட்ட தடை
நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும்
செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும்
செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு
அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும்
உயரும். மற்றவர்கள் உங்களை நேசிப்பது மட்டுமில்லாமல் உங்கள் நட்பை விரும்பி
போற்றுவர். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல
பெயருடன் வலம் வருவீர்கள்.
பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப்புழக்கம் சற்று தாளாரமாக
இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள்
வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும்
ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால்
நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையில்லாமல்
இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களைப் பற்றிய செய்திகள் பரவலாக பரவும். அவை
நல்லவிதமாக அமையும்.
அடிக்கடி பயணங்கள் ஏற்படும். நீண்ட தூர பிரயாணங்கள்
ஏற்படும். வீடு,
இடம், மனை மாற்றம்
ஒரு சிலருக்கு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த செய்திகள்
சாதகமாக வந்து சேரும். எடுக்கும் புது முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தாயாரின் அன்பும் ஆதரவும் இக்காலங்களில் நன்கு அமையும். மேலும்
ஒரு சிலருக்கு இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், நிறைய வீட்டு
உபயோகப்பொருள்கள் வாங்க வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும். மேலும் அடிக்கடி சுப
நிகழ்ச்சிகளில்,
சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து சேரும்.
விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் சற்று
பொறுமையுடன் இருத்தல் வேண்டும். உங்களுடைய 5 ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் விருந்து
கேளிக்கைகளில் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை
பாக்கியம் கிட்டும். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பின் புத்திர பாக்கியம்
ஏற்படும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு புத்ர தோஷத்தை
உருவாக்குவார். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு கூடாது. தேவையில்லாமல்
பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால்
தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.
வேலை தேடுபவர்களுக்கும், இது காறும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை
வாய்ப்புகள் அமையும். சந்தர்ப்பங்களும் சேர்த்து வரும். நல்ல வேலையாட்களால் நன்மை
ஏற்படும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும்.
சுய தொழில் செய்ய வாய்ப்பும், தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க
சந்தர்ப்பங்களும் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும்.
முன்னோர்களது சொத்துகள் கிடைக்கும். அடிக்கடி ஸ்தல யாத்திரையும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல
வாய்ப்பும். வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். ஒரு சிலருக்கு 2வது திருமணமும் நடைபெற வாய்ப்பும் அமையும்.
பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் ஒரு சிலருக்கு
முதலாளிகளாக உருவாகும் வாய்ப்பு அமையப்பெறும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நல்ல
நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மைகள் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளின்
அன்பும்,
ஆதரவும் கிட்டும். அவர்களால் நன்மையும் எற்படும்.
வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமும் திறமையும் ஒரு சிலருக்கு அமையும்.
பரிகாரம் : உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை
செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள்.
செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில்
வணங்குங்கள்.
கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள், மோகினி, மிருகசீர்ஷம் 1,2 ம் பாதங்கள்
இ, ஈ, உ, எ, ஞ, வ, வா, வி,வீ, வு, வே, வை ஆகிய
எழுத்துக்களை முதலில் பெயர் எழுத்துக்களாக உள்ளவர்களும் வைகாசி மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட படும் பலன் கள் ஓரளவு பொருந்தும்.
வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் 2வது ராசியாக
நவகிரகங்களில் சகல சுகங்களையும் அனுபவிக்க வல்ல கிரகமான சுக்ரன் வீட்டிற்கு
உரியவரான ரிஷபராசி நேயர்களே யாரையும் புன்னகை தவழும் முகத்துடன் இனிமையான குரலுடன்
எதிர்கொண்டு வரவேற்பவர்கள்.
மற்ற கிரகங்களைக் காட்டிலும் அள்ளிக் கொடுக்கும் ஆற்றல்
மற்றும் வல்லமை பெற்ற கிரகமாக விளங்கும் சுக்ரபகவான் உங்கள் ராசிநாதனாக உள்ளார்.
அவர் நல்ல படிப்பிற்கும், பேச்சுக்கும், பணப் புழக்கத்திற்கும் சகல சௌபாக்கியத்தையும் இவ்வுலகில்
அனுபவிப்பதற்கு காரணமாக உள்ளார். அப்படிப்பட்ட சுக்ரபகவான் ராசியில் பிறந்த
உங்களுக்கு / உங்களது ராசிக்கு இதுவரிய இதுவரை 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்த சனி பகவான் இனி 8ம் வீடான அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று சுமாரான பலன்
தான் என்றே கூற முடியும்.
இதுவரை 7ம் இடத்தில்
சஞ்சரித்து வந்த சனிபகவான் கண்ட சனியாக நம்மை வாட்டி வதைத்து ஒரு வழி
பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம
ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற
வேண்டும்.
உங்களது ராசிக்கு 8ம் ராசியான தனுசுராசி சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று
மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார்.
தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமை என்று ஒரு ஆயுதத்தை
கையில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று
தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின்
ஆலோசனைகளைக் கேட்டு நடத்தல் வேண்டும்.
தேவையில்லாமல் பேசுவது கூடாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற
வேண்டும். அதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதே சமயம் உங்கள் ராசிக்கு 2ம் அதிபதியாக புதன் வருவதால் பணப்புழக்கம் தாரளமாக இருந்து
வரும். எதிர்பாராத தனவரவு பொருள்வரவு மற்றும் மனைவி மூலம் தனவரவு ஒரு சிலருக்கு வந்து
சேரும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். உடன் பிறந்த
சகோதர,
சகோதரிகளால் எதிர்பாராத நன்மையும் அதே சமயம் அவர்களால்
தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை பிரிய நேரிடும்.
பயணங்கள் அடிக்கடி அமையும். அதனால் அலைச்சல்களும்
வேதனைகளும் தான் மிஞ்சும். புதிய முயற்சியில் கஷ்டப்பட்டு முன்னேற வாய்ப்பு
ஏற்படும். ஒரு சிலருக்கு பழைய இடத்தை கொடுத்து புதுமனை வீடு வாங்க வாய்ப்புகள்
வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் போராட்டங்கள் ஏற்பட்டு இறிதியில் வெற்றி
கிட்டும்.
தாயாரால் எதிர்பாராத நனமைகள் கிட்டும். தாயாரின் அன்பும்
ஆதரவும் ஒரு சிலருக்கு கிடைக்கும் அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம்
தேவை. அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்
அதனால் நனமையும் விருந்து கேளிக்கைகளில் ஈடுபட மனம் விரும்பும் சுற்றுலா விருந்து
விழாக்களில் கலந்து கொண்டாலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம்
கிட்டும். அதில் நிறைய தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். குழந்தைகளால்
தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வந்து மறையும்.
குழந்தைகளை எச்சரிக்கையாக வளர்த்து வருதல் அவசியம். அவர்களின் செயல்பாடுகளை நன்கு
கண்காணித்து வருதல் வேண்டும்.
வழக்குகள் தேவையற்ற மனச்சஞ்சலங்களை உண்டு பன்னிக்
கொண்டிருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி
பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத
பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும். கேட்ட இடத்தில்
பணம் கிடைக்கும் அரசாங்க விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வேலையில்லாமல்
இருப்பவர்களுக்கு கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து கொண்டு அதன் பின்
எதிர்பார்த்த வேலைக்கு முயற்சி செய்யவும் நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காரர்களால்
பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் உண்டாகும். உணவு பழக்க வழக்கத்தில்
அதிக கட்டுப்பாடு அவசியம். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.வீட்டு வளர்ப்பு
பிராணிகளால் நனமையே ஏற்படும். தாய்மாமங்களின் உறவு நன்கு அமையும்.
சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில்
கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா
போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். காதல் விஷயங்கள்
மகிழ்ச்சி அளிக்கும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுப
நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டாலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். எனவே
எதற்கும் கவலைப்படாமல் முயற்சி என்ற ஒன்றை விடாமல் மேற்கொள்ளல் வேண்டும்.
வேலையில் போட்டி பொறாமைகள் நிறைய தடைகள் மற்றும்
விருப்பமில்லாமல் இருந்தாலும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி
ஆலயதரிசனம்,
சாமி தரிசனம், பெரியவர்களை
மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டமசனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து
வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.
வெளியூர்,
வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை
குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை
வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.
அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும்
நிதானமாக கையாளுதல் வேண்டும். யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற
சூழ்நிலை உருவாகும். நம்புவர்கள் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும்
மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால்
தோல்வியிலிருந்து விடுபட்டு வெற்றி நிச்சயம் அமையும். எதற்கும் அவசரப்படுதல்
கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. ஆபரேஷன் போன்ற
விஷயங்களை நன்கு ஆராய்ந்து அதன்பின் அறுவை சிகிச்சை செய்தல் வேண்டும்.
பரிகாரம் : சனிக்கிழமையில்
சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள்
கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி
வாருங்கள்.
மிருக சீரிஷம் 3-4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம், 1,2,3ம் பாதம்
(உங்கள் ரசி எது என்று தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தாக
கா,
கி, கு, கூ, க, ங, ச, சே, கோ, கை, ஹை மற்றும்
ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட பலன்கள் பொருந்தும்)
வான மண்டலத்தில் 3வது ராசியாக வலம் வரும் மிதுனராசியில் பிறந்த உங்கள் ராசி
நாதன் புதன் ஆவார். இவர் புத்திக்கும், வித்தைக்கும், ஞானத்துக்கும்
அதிபதியாவார். காக்கும் கடவுளான திருமால் புதனுக்குரிய தெய்வமாவார். எனவே திருமால்
உலகத்தை காப்பது போல் நீங்களும் பலரை காப்பாற்றும் பொறுப்பு உடையவர்களாவீர்கள்.
பலருடைய சவால்களையும் பேச்சுகளையும், சிந்தனைகளையும்
மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். எதையும் மனதால் கணக்கு போடும் உங்களுக்கு இந்த
சனிப் பெயர்ச்சியானது சற்று சுமாராகவே இருந்து வரும்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதும் இனி அவர் உங்கள்
ராசிக்கு 7ம் இடத்தில் கணடச்சனியாக இருந்தது பலன் தருவார். 6ம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல்
கடன் இவையெல்லாம் இல்லாமல் இல்லை. அதே சமயம் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் அதனுடைய கடுமை வரும்
காலங்களில் சற்று குறைந்து காணப்படும். எதையும் சிந்தித்து செயல்படும் உங்கள்
எண்ணம்தான் உங்கள் வாழ்க்கையின் முதல் என்று சொன்னால் அது மிகையாகாது.
சனியானவர் உங்களது ராசிக்கு 8 மற்றும் 9ம்
வீட்டிற்கு அதிபதியாகி 7ம் இடத்தில்
சஞ்சாரம் செய்வது சற்று சுமாரான பலன் என்றுதான் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர்
குரு வீட்டில் சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்புகள்
அமையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் கிட்டும். வெளியூர் மற்றும்
வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம்
கூடிவரும். உங்கள் ராசிக்கு சனி 8ம் அதிபதி
என்றாலும் அவரே 7ம் அதிபதியாக இருந்து அவர் 7ல் பலம் பெற்று உங்கள் ராசியை பார்ப்பதால் உங்கள்
வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் சிலசமயம் வந்து சேரும்.
எனென்றால் 8ம் இடம்
என்பது கஷ்டத்தை பற்றி சொன்னாலும் அதிர்ஷ்டத்திற்கு 9ம் இடமாகும். இரண்டுக்கும் அவரே அதிபதியாக உங்கள் ராசியைப்
பார்ப்பதால் இக்காலங்களில் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும்
மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும்.
பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம்
திரும்ப கைக்கு வந்து சேரும். அந்த பணங்கள் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும்.
புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும்
சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும்.
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி
குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். குடும்பத்தில் புதிய
வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும்
வந்து சேரும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிய நேரிடும்.
தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும். எப்பொழுது எல்லாம்
உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை
உங்களுக்கு அனுப்பி வைப்பார். தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின்
அன்பும் ஆசியும் கிட்டும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு
அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும்.
இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள்
இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும்.
காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து
திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள்
வந்து சேரும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாத விஷயங்களில்
தலையிடக் கூடாது.
வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை
மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை
விட்டுவிடக் கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள்
வைத்து கொள்ளல் வேண்டும். வேலையாட்களால் நன்மையும். அதே சமயம் அவர்களால் ஒரு
சிலருக்கு தேவையற்ற பிரச்சனையும் வந்து சேரும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும்
கிட்டும். வீட்டு வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். தேவையற்ற பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
விரதங்களை தவிர்ப்பது நன்று. தள்ளிப்போன திருமண சுபகாரியங்கள் குறிப்பாக காதல்
திருமணங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வழக்குகள் இழுபறியாகவே
இருந்தாலும் இறுதியில் வெற்றி கிட்ட வாய்ப்பு அதிகம். அரசாங்க விஷயத்தில் அதிக
எச்சரிக்கை தேவை. தேவையற்ற கடன் மற்றும் வட்டி கட்ட வேண்டி வரும். தந்தையாரின்
உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் கூட்டுத் தொழில் ஓரளவு சாதகமாக
இருக்கும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை.
ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்யோக உயர்வு ஊதிய உயர்வு
கிட்டும். வேலையில் அதிக கவனம் தேவை. சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள்
வந்து சேரும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். நண்பர்களால்
எதிர்பார்த்த,
பாராத உதவிகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம்
இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
பரிகாரம் : சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால்
அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும்
சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
(புனர்பூசம், 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
(ஹி – ஹூ – ஹே – ஹோ – ட – டி – டு – டெ – டோ – கொ – கௌ – மெ – மை போன்ற எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்கள்
ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 4வது ராசியாக வலம் வரும் உங்கள் ராசிநாதன் சந்திரன் ஆவார்.
நவக்கிரகங்களில் சந்திரன் ஒருவர் மட்டுமே வளர்ந்து தேய்ந்து வலம் வருபவராக
இருப்பார். ஊரோடு சேர்ந்து வாழ்ந்து பழகும் இயர்புடைய நீங்கள் சிந்தனை சக்தியும்
அதை செயல்படுத்துவதில் ஆர்வமும் திறமையும் உடையவர்கள். அதற்காக முயன்று முயற்சி
அடைந்து வெற்றி பெறப்படுவீர்கள். எதற்கும் ஆசைப்படாத உங்களுக்கு ஏதாவது ஒரு
துறையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்ற தனியாத ஆர்வம் உடையவர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்
பூசம்,
ஆயில்யம் நட்சத்திரத்தை உடைய உங்கள் கடகராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான வெற்றி, ருண, ரோக, சத்குரு எதிரி கடன் ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார். இதுவரை
போராட்டமாக இருந்து வந்த வாழ்க்கையில் வெற்றியின் அருமையை உணர வேண்டிய தருணம்
வந்து விட்டது. இதுவரை நடை பெறாமல் தள்ளிப் போன விஷயங்கள் எளிதில் வெற்றி பெற
சந்தர்ப்பம் அமையும்.
6ம் இடமான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் வேலை
இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் உருவாக்குவார். வேலையில்
முன்னேற்றமும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படுத்துவார். இதுவரை அடிக்கடி வேலை மாறிய
அல்லது பார்த்த வேலையை விட்டுவிடக் கூடிய சூழ்நிலையில் இருந்த நீங்கள் இனிமேல்
உங்களுக்கு பிடித்த வேலையில் அமரும் வாய்ப்பு அமையும். அதிக மகிழ்ச்சியுடன்
வேலையில் ஈடுபடுவீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமும் உங்களைச்
செயல்பட வைப்பார். இதுவரை நிலுவையில் இருந்த பணம், பொருள் வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதியமும் அதற்கேற்ப உங்களுக்கு
ஊதிய உயர்வும் ஏற்படும். வேலையில் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும்.
உங்களுடைய கௌரவம் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும் எடுக்கும் காரியங்களில் முழு மனதுடன்
ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாகவும்
சகாயமாகவும் வந்து சேரும். புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறப்
பாடுபடுவீர்கள். பேச்சு வார்த்தைகளில் எதிர்பாராத லாபம் ஏற்படும். பணப்புழக்கம்
தாரளமாக இருந்து வரும். இதுவரை வராமல் இருந்த வந்த சொத்து பத்துக்கள், நகைகள், பணங்கள் இனி
தானாக வந்து சேரும்.
சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
அவர்களுக்கு வேலை மற்றும் சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில்
புது உறுப்பினர்கள் வருகை நன்மையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வந்து சேரும். தாயாரால்
எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
ஒரு சிலருக்கு வண்டி வாகனம், வீடு, இடம், மனை
போன்றவைகள் அமைய வாய்ப்புகள் வந்து சேரும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட
வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.
உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.
அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
வேலையாட்களால் நன்மை ஏற்படும். தாய் மாமன்களின் அன்பும்
ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால்
எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள்
அதிகரிக்கும்,
எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். புது புதுப்
பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில்
தேமல்,
அரிப்பு, கட்டி போன்ற
நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும்.
போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன்
சென்று வருதல் வேண்டும்.
காதல் விஷயங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சாதகமாகவும்
இருந்து வரும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புதிய
தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக
இருந்து வரும். முன்னோர்கள் சொத்து அல்லது எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும்.
தந்தையாரின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். அரசாங்கத்தால்
எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தைகள் முதலீட்டில் அதிக கவனம் தேவை. ரேஸ், லாட்டரி இவற்றில் அதிக எச்சரிக்கைகள் தேவை. விசா, பாஸ்போர்ட் இவைகள் எளிதாக வந்து சேரும். நண்பர்களால்
எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும்
சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
பரிகாரம் : ஸ்ரீரங்கநாதரை
வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.
சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு
தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான்
உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
No comments