நவகிரக தோஷ பரிகாரம் - சனி
சனி தோஷம் விலக:

சனி தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல்
பாதிப்பு,
உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள்
ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு
தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்;
தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு
வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன்
துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான்
காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம்
செய்வதும்,
சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள
நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு
சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம்.
இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம்
அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி
உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது
அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை
வழிபட்டபின்,
நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து
விட்டு வருவது நல்லது.
அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை
தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும்
சங்கடங்கள் வராது.
சனி துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!
முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!
No comments