Header Ads

நவகிரக தோஷ பரிகாரம் - சுக்கிரன்

சுக்ர தோஷம் விலக:

சுக்ரன் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.

உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

சுக்ர தோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி

வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.

வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.

சுக்ர துதி

சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!

மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.

துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி

வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.

No comments

Powered by Blogger.