எச்சரிக்கை - நெய் தீபம்
எச்சரிக்கை - நெய் தீபம்
கெடுதல்களின் உச்சமாய் மாறிவருகிறதா நெய் தீபம்?
ஆலயங்களுக்கு செல்லும் பலர் தவறாமல் நெய் தீபம் ஏற்றுவது
வழக்கம்.
அனால் நாம் ஏற்றும் தீபம் உண்மையில் தூய்மையானது தானா என்று
யாரும் சோதித்து பார்ப்பதில்லை.
நமக்கு பல இடங்களில் ரெடிமேடாக கிடைக்கும் நெய் தீபத்தை
எப்படி செய்கிறார்கள்?
அதனால் ஏற்படும் விளைவு என்ன?
உணவகங்களில் உபயோகப்படுத்திவிட்டு மீறும் எண்ணெய்களை வாங்கி
அதை நன்கு வடிகட்டி கொதிக்கவைத்து அதில் டால்டா, பசைமாவு, மரவள்ளிக்கிழங்கு
மாவு மற்றும் மெழுகு போன்றவற்றை சேர்ந்து பின் நெய் போன்ற நிறம் வருவதற்காக சில
வண்ணப் பொடியினை கலந்து பின் அதனை அகல் விளக்கில் அடைத்து ஒரு திரி போட்டு 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் நம்மிடம் விற்கப்படுகிறது.
இது போன்ற நெய் தீபத்தை ஏற்றுவதால் எந்த பயனும் இல்லை.
அதோடு இது இயற்கைக்கும் மாசு விளைவிக்க கூடியது.
தூய்மையான பசுநெய் கொண்டு ஏற்றப்படும் தீபமானது சீராக
எரியும்.
அதோடு அந்த தீபத்தில் நறுமணம் வரும்.
நெய் தீபத்தை ஏற்றுவதால் பிராண வாயு தூய்மை அடைந்து
கோவிலில் உள்ளவர்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும்.
இப்படி பல நன்மைகளுக்காக நம் முன்னோர்கள் நம்மை ஏற்ற சொன்ன
நெய் தீபத்தில் இன்று எத்தனை கலப்படங்கள்.
இது போன்ற கலப்பட வேலைகளை அணைத்து வியாபாரிகளும்
செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் இது போன்ற செயல்களை சிலர்
செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
கோவில்களில் தீபம் ஏற்ற நினைப்பவர்கள் வீட்டில் இருந்து
அதற்கான நெய்,
திரி, தீப்பெட்டி
என அனைத்தையும் கொண்டு சென்று தீபம் ஏற்றுவது தான் இன்றைய சூழ்நிலையில் சிறந்ததாக
கருதப்படுகிறது.
No comments