Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 6

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 6


நான்காம் முறையாக மதாலசை கர்ப்பம் அடைந்தாள். குழந்தைப் பிறந்து பெயர் சூட்டும் வைபவம் வந்தது. மன்னன் ஒரு தீர்மானத்தோடு இருந்தான். இந்த முறை அவன் பெயர் சூட்டாமல் அவளை குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கூறினான். அனைத்து முந்தய நிகழ்சிகளையும் தோற்கடிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. பிறந்த குழந்தைக்கு மதாலசை வெறி நாய் என அர்த்தம் தரும் பெயரான அலர்க்கன் என பெயர் சூட்டினாள். அனைவரும் அதிர்ந்து போனார்கள். மன்னன் அவமானத்தினால் குன்றிப் போனான். முதன் முறையாக அரசன் அவளிடம் கோபமாகக் கேட்டான், நல்ல விழாவில் இந்தக் குழந்தைக்கு அசிங்கத்தனமாக வெறி நாய் என அர்த்தம் தரும் அலர்க்கன் என ஏன் பெயரிட்டாய்?' எனக் கேட்டான்.  மவுனமாக இருந்த மதாலசை சலனமின்றிக் கேட்டாள் ' மன்னா ஒவ்வொரு முறையும் நீங்கள் குழந்தைக்கு பெயர் வைத்தபோதும்  நான் நினைத்துப் பார்த்தேன்........ நீங்கள் வைத்தப் பெயர் குழந்தையின் உடலுக்கா அல்லது அதனுள் உள்ள ஆத்மாவிற்கா? ... இந்தப் பெயருடன் அந்த ஆத்மாவிற்கு என்ன சம்மந்தம்...இந்த உடலோ அழியக் கூடியது, ஆனால் ஆத்மா அழிவது இல்லை....அந்த ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின் அது எங்கு போக உள்ளது என்பது அதற்கு தெரியுமா....இல்லை மற்றவர்களுக்காவது தெரியுமா?.....அந்த ஆத்மா இந்தப் பெயரை தன்னுடன் இணைத்துக் கொண்டு செல்லுமா இல்லை வைத்தப் பெயரைப் போல அது நடக்குமா?....இந்திரன் என்று பெயர் வைத்தால் அது இந்திரன் போன்ற குணத்துடன் இருக்குமா?....ஒவ்வொருவரும் சாஸ்ரோத்திரத்துடன் மந்திரம் ஓதி வைக்கும் பெயர் ஒரு அடையாளத்திற்குத்தானே? வைத்தப் பெயருக்கும் வாழும் வாழ்கைக்கும் சம்மந்தம் இல்லாத இதற்கு எதற்கு சடங்குகள் என எண்ணினேன், சிரித்தேன். அதனால்தான் நான்காம் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறியபோது அழைப்பதற்குத்தானே இந்தப் பெயர் என நான் அப்படி பெயர் சூட்டினேன். அதற்கு ஏன் நீங்கள் கோபப்படவேண்டும்?'

அவள் கேட்டுக் கொண்டே இருந்த கேள்விகளுக்கு அவனால் பதில் கூற முடியவில்லை. அவள் கேட்ட கேள்விகள் அனைத்துமே நியாயமாகவே இருந்தன.  சற்று நேரம் சம்பாஷனை தொடர்ந்தது. முடிவாக அரசன் அவளிடம் கூறினான், 'சரி ஆனது ஆகட்டும். முதல் மூன்று குழந்தைகளுக்கும் தத்துவப் பாடல்களைப் பாடி அவர்களை சன்யாசிகள் ஆக்கிவிட்டாய். இந்தப் பிள்ளைக்காவது உலக பற்றோடு இருக்குமாறு , மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகளை உணருமாறு பாடல்களை பாடி வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதை செய்வாயா '. அதற்கு மதாலசை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அது முதல் அவள் நான்காம் குழந்தையை மிகப் பொறுப்புள்ளவனாக இருக்கும் வகையில், உலகப் பற்று மிக்கவனாக இருக்கும் வகையில் வளர்த்து வந்தாள் . அரசியல் அறிவை அந்தப் பிள்ளை பெற்றான். நிர்வாக அறிவை பெற்றுக் கொண்டான். வயதுக்கு வந்ததும் அவனுக்கு மணம்  முடித்துவிட்டு தனது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ருதுத்வாஜன் தனது மனைவி மதாலசையுடன் கானகத்துக்கு சென்று விட்டான்.  தனது பெற்றோர்கள் தன்னைவிட்டுப் போவதை அலர்க்கனால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் வேறு வழி இன்றி அதை ஏற்றுக் கொண்டான். போகும் முன் மதாலசை அவனிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து விட்டு கூறினார்' அலர்க்கா, வாழ்க்கையில் வரும் அனைத்து சோதனைகளையும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். என்றைக்கு உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றதோ அன்றைக்கு இந்த மோதிரத்தை  உற்றுப்பார் . அதில்  உனக்கு ஒரு வரி தெரியும். அதைப் படித்துப் பார். அதுவரை உன் விரலில் இதை அணிந்து கொண்டு இரு. உன்னால் போருக்க  முடியாத நிலைமைக்குப் போனால் ஒழிய அதை எடுத்துப் பார்க்காதே. அதுவரை நான் கூறியதை நினைத்தும் பார்க்காதே '.

Our Sincere Thanks to 
Santhipriya


Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.