குரு ஸ்ரீ ராகவேந்திர் - குலப்பெருமை
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு
வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப்
படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
குலப்பெருமை : விஜய
நகரத்தைத் தலைநகராகக் கொண்டு 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்மண்டலத்தை ஆண்டு
வந்தவர் கிருஷ்ண தேவராயர். அவரது சமஸ்தானத்தில் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்
முதலிய மொழிகளில் விற்பன்னர்களான பல வித்வான்கள் ஆஸ்தான பண்டிதர்களாகக்
கௌரவிக்கப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவர் கிருஷ்ணபட்டர் எனும் அந்தணர் ஒருவர். இவர்
மாத்வ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர். இவர் சாஸ்திர பரிச்சயத்துடன் சங்கீத
பரிச்சயமும் உள்ளவர். வீணை வாசிப்பதில் நிபுணர். இயவருக்கு கனகாசலப்பட்டர் என்றும், திம்மண்ணபட்டர் என்றும் இரு குமாரர்கள் பிறந்தனர்.
இவர்களில் இளையவரான திம்மண்ணபட்டர் சகல சாஸ்திர பாரங்கதராகவும், வீணாவாதன நிபுணராகவும் விளங்கினார். தந்தை போன்று இவரும்
ஆஸ்தான பண்டிதராக கௌரவிக்கப் பட்டார். இவரது தர்மபத்தினி கோபிகாம்பாள் என்பவர்.
திம்மண்ணபட்டர், கோபிகாம்பாள் தம்பதியினர் வெகுகாலமாய் சந்ததி ஏற்படாமல்
ஏக்கமுற்றிருந்தனர். இவர்களின் குலதெய்வம் ஸ்ரீ வெங்கடாசலபதி. எனவே இத்தம்பதியினர்
திருப்பதி சென்று வெங்கடாசலபதியைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கியிருந்தனர். அங்கு அவர்களுக்கு
இறைவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது, வெங்கடாசலபதி அருளால் பிறந்த சேயாதலால் அதற்கு "
வேங்கடாம்பாள் " என்று நாமகரணம் செய்து செல்லமாக வளர்த்து வந்தனர்.
ஆயினும் ஒரு ஸத்புத்திரன் தோன்றாத வருத்ததில் மறுபடியும்
வெங்கடாசலபதியை நோக்கித் தவம் புரிந்தனர்.
ஓரிரண்டு ஆண்டுகளில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு "
குருராஜன் " என்று நாமகரணம் செய்து செல்லமாக வளர்த்து வந்தனர். மூன்றாம் வயதினிலே
குருராஜனுக்கு அக்ஷராப்யாசம் ( ஏடு தொடக்குதல் ) செய்து, காவிய நாடகங்களையும், சாஸ்திரங்களையும் முறையே கற்பித்து வந்தனர். குருராஜன்
படிப்பில் காட்டிய ஆர்வத்தை நோக்கி அவனைத் தகுந்த ஆசானிடம் வேதாந்த வித்தையைப்
பயிலும்படி அனுப்பினார் அவனது தந்தை. அதன்பின் தம்பதிகள் " புவனகிரி "
எனும் ஊரில் தங்கி வந்தனர்.
No comments