குரு ஸ்ரீ ராகவேந்திர் - அவதாரம்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு
வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப்
படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
அவதாரம் : இது இவ்வாறு இருக்க திம்மண்ணபட்டர் தமது செல்வப்
புதல்வியான வேங்கடாம்பாளை தக்க வரனுக்குக் கன்னிகாதானம் செய்து வைத்தார். இப்படி
மகனும்,
மகளும் பிரிந்தமையால் தம்பதிகள் மீண்டும் மனவருத்தம்
கொண்டனர். மறுபடியும் வேங்கடாசலம் சென்று பகவனுக்கு சேவை செய்து வந்தனர். சில
ஆண்டுகளில் வெங்கடாசலபதியின் அருளால் அவர்கட்கு மீண்டும் ஒரு ஆண் மகவு தோன்றியது.
அக்குழந்தையின் முகப்பொலிவும், துடிதுடிப்பான
பாங்கும்,
காண்போரை ஈர்க்கும் வசீகரமும் தெய்வாம்சத்துடன் பிறந்த
குழந்தையென முடிவுசெய்யச் செய்தன.
பெற்றோர் அக்குழந்தைக்கு " வேங்கட பட்டர் " என
நாமகரணம் செய்து சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்து ஐந்து ஆண்டுகளையடைந்த தம் மகனுக்கு அக்ஷராப்யாசம் ( ஏடு
தொடக்குதல் ) செய்வித்தார் தந்தை. நாளுக்கு நாள் திம்மண்ணபட்டரின் உடன் நலம் குறைந்து
வந்தது. எனவே தன் மூத்த மகனான குருராஜனை அழைத்து " குருராஜா ! என்னுடைய இறுதி
நாட்கள் நெருங்கி வருகிறது, உனது தம்பி
வேங்கடபட்டனுக்கு நல்ல முறையில் வித்யாப்பியாசத்தை நீயே செய்விக்க வேண்டும், இனி நீ அவனை அண்ணனாகவும் தந்தையாகவும் காப்பாற்ற வேண்டும்
" என ஆணையிட்டு சில நாட்களில் பரமபதம் சென்றார்.
No comments