Header Ads

மயிலம் பொம்மபுர ஆதீனம் - வரலாறு

மயிலம் பொம்மபுர ஆதீனம்


மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள்பக்தி நெறி தழைக்கவும்தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும்.

ஆதீனத் தோற்றம்

மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார்.

ஆதீனகர்த்தர் சங்குகன்னர்

அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவருக்கருகில் சிவயோக சமாதியுற்று சிவலிங்க வடிவமெய்தி அடியார்களால் வணங்கப்பெறும் நிலை பெறுக!’ என்று வாழ்த்தியருளினார்.

சங்குகன்னர் அவதாரம்

அவ்வழியே சங்குகன்னர் உலகில் கருவழித் தோன்றாமல் திருநீறுஉருத்திராக்கம்கல்லாடைஇட்டலிங்கம் அணிந்த மார்புசெஞ்சடைகுண்டலமணிந்த திருச்செவிகள்சின்முத்திரையுடன் கூடிய வலக்கைதிருநீற்றுப்பைமாத்திரக்கோல் இடக்கைவீரசைவ ஆகமங்கூறும் திருவாய்ஐந்தெழுத்தை ஒலிக்கும் திருநாக்கு ஆகியவற்றுடன் கூடிய திருக்கோலத்துடன் பத்து வயது நிறைந்த பாலகனாகத் தோன்றினார்.

ஆதீனத் தோற்றம்

இதனை அடுத்துள்ளபெருமுக்கல் முதலிய மலைகளுக்கும் வனங்களுக்கும்தம் யோக வல்லமையால் உலாவிச் சென்று ஆங்காங்குள்ள சித்தர்களுக்கும்அடியார்களுக்கும் வீரசைவ ஆகம நெறிகளை உணர்த்தினார். சித்துக்களையும் செய்தருளினார். பாலவயதினராய்ச் சித்துக்கள் பல செய்தமையால் பாலசித்தர் எனப்பெயர் கொண்டார். பிரம்மநிலையை உணர்ந்து தங்கியிருந்தமையால் இவ்வூர் பிரமபுரம் என வழங்கலாயிற்று. பாலசித்தரின் தவஆற்றல் உலகில் பரவியதால் சீடர்கள் பலர் உருவாயினர். அச்சீடர்களின் பக்குவநிலையறிந்து ஞானஉபதேசம் செய்தருளித் தாம் தங்கிச் சிவயோகம் புரிவதற்கு அமைத்துக் கொண்ட திருமடம் பொம்மயபாளையத் திருமடம் என்ற பெயரில் அழைக்கப் பெறலாயிற்று.

மயிலை வரலாறு


இங்ஙனம் பாலசித்தர் திருமடத்தில் வீற்றிருக்கும் நாளில்சிவபெருமானது ஆணையின்வண்ணம் நாரதர்பாலசித்தர் முன் தோன்றி, ‘பொம்மபுரத்திற்கு மேற்கே மயூராசலம் (மயிலம்) என்ற ஓர் ஊர் உள்ளது. ஆங்கே முன்னாளில் சூரபதுமன் மயில் வடிவ மலையாக இருந்து முருகனை நோக்கிகடுந்தவம் புரிந்தனன். அதற்கு முருகப் பெருமான் சூரபதுமன் விருப்பப்படியே அவனை மயில்வாகனமாக ஏற்றருளினார். அவனும் ஐயனேமலைவடிவாக இருந்து யான் தவம் செய்தமையால் இம்மலை மயிலமலை என்ற பெயரால் வழங்க வேண்டும்” என்றும் தேவரீர் எந்நாளும் இங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான். அவ்வாறே முருகனும் சிலகாலத்திற்குப் பின்னர் இம்மலையில் பாலசித்தர் என்பால் எம்மை நோக்கி வந்து தவம் புரிந்து எம்முடன் போரிட்டு எம்மால் ஆட்கொள்ளப் பெறும் காலத்து எம்தேவியருடன் எழுந்தருளி நின் விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்றுரைத்து மறைந்தருளினார். எனவேதாங்களும் மயிலமலையை அடைந்து தவம் செய்தால் எண்ணிய யாவும் கைகூடும்’ என்று நாரதர் பாலசித்தருக்கு உணர்த்தி விடைபெற்றார்.

மயிலைத் தவம்

இந்நிலையில்பாலசித்தர் மயிலம் அடைந்து அங்குள்ள சுனைகளில் நீராடி முருகனை வழிபட்டார். மேலும் முருகனை நோக்கிபதுமாசனமாக முப்பத்தைந்து ஆண்டு காலம் தவநிலையில் இருந்தார். முருகன் அருள்புரியாததால் பஞ்சாக்கினி நடுவிலிருந்து கடுந்தவமும் புரியலானார். இந்நிலையிலும் முருகப்பெருமான் அருளாததால் அவர்தம் தேவியராகிய வள்ளி தெய்வயானையரை நோக்கிபலநாள் தவம் செய்தார் பாலசித்தர். தேவியர் இருவரும் சித்தரின் தவத்திற்கு இரங்கிஅவருக்கு அருள்புரியுமாறு முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகனும் அருள்புரியும் காலம் வருந்துணையும் யாம் அமைதியாக இருப்பதனை அறியாமல் அவருக்கு அருள்புரிய வேண்டுமென்று வற்புறுத்தும் நீவிர் இருவரும் எம்மை விட்டு அகல்வீராக” என ஆணையிட்டார்.

அன்னையர் அருள்

உடனேபாலசித்தருக்கு அருள்புரியாத முருகன்பால் ஊடல் கொண்ட தேவியர் இருவரும் சித்தக் கன்னியர்களாக வடிவம் கொண்டு சித்தருக்கு முன் தோன்றி நின்றனர். அதனைக் கண்ட சித்தர் முருகப் பெருமானுடைய தேவியர்களே தம்மை ஆட்கொள்ள இவ்வுருக் கொண்டு எழுந்தருளினர் என யோக ஞான வல்லமையால் உணர்ந்துஅவர்களை உபசரித்து, “நீங்கள் யார்வந்த காரணம் யாது?” என வினவினார். அவர்களும் இவ்விடத்தில் சித்தர் இருப்பதை அறிந்து இங்கு உறைய விரும்பி வந்தோம். நீங்கள் உங்கள் புதல்வியர்களாக எங்களைப் போற்றிக் காத்தல் வேண்டும்” என வேண்டினர். அதற்குச் சித்தரும் உடன்பட்டுத் தேவியரைதேவதச்சனைக் கொண்டு ஒரு மாளிகை உருவாக்கச் செய்து அதில் வீற்றிருக்கச் செய்தார்.

முருகனொடு பொருதுதல்

முருகப்பெருமான் பாலசித்தருக்கு அருள்புரியும் காலம் கனிந்தமையால் பிரிந்த தேவியரைத் தேடிவருவார்போலமயில மலையை அடைந்து தேவியர் இருக்கும் இடம் இதுவெனத் துணிந்து போர்க்கோலம் கொண்ட அரசர் வடிவத்தில் அம்மாளிகையில் நுழையச் சென்றார். அங்கிருந்த பாலசித்தர், “கன்னியர் இருக்குமிடத்து ஆடவர் புகுதல் தகாது” எனத் தடுத்தும் முருகன் நுழைய முற்பட்டபோது இருவருக்கும் போர் ஏற்பட்டது. பாலசித்தர் முருகன் எய்திய படைகள் அனைத்தையும் தடுத்ததோடுஇறுதியாக முருகன் ஏவிய வேலினையும் கன்னியர் அருளால் தம்வசப்படுத்திக் கொண்டார். முடிவில்முருகப்பெருமான் படைக்கருவிகள் அற்றநிலையில் சித்தருடன் நேருக்கு நேராக மற்போர் புரியத் தொடங்கினார். பாலசித்தரது மார்பில் அறைந்து அவரைக் கீழே தள்ளியும் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டும் காலால் உதைத்தும் போர் புரிந்து அருளினார்.

மணக்கோலம்

தம்மோடு போர்புரிந்தவர் முருகனே என உணர்ந்த பாலசித்தர் போர் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு திருவடி பணிந்து வேண்டி நின்றார்.

முருகனும் அவ்வாறே பாலசித்தருக்கு ஞான உபதேசம் வழங்கி மாளிகையினுள் இருந்த அரியணையில் அமர்ந்தார். அந்நிலையில் சித்தரும்தேவியர் இருவரையும் அழைத்து வந்துஅவர்களோடு முருகப் பெருமானை வணங்கி நின்று, “அடியேன் என் புதல்வியர்களாகப் பாவித்த இக்கன்னியர்களை தேவரீர் மணமுடித்து மணக்கோலத்துடன் இத்தலத்தில் எந்நாளும் எழுந்தருள வேண்டும்” என வேண்டினார்.

அவ்வாறேமுருகனும் உமாதேவியாரோடு சிவபெருமான் தேவகணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானித்தார். அக்கணத்தேதேவகணங்கள் சூழ இறைவனும் இறைவியும் எழுந்தருளி மயன் வகுத்த மணிமண்டபத்தில் வீற்றிருந்தனர். சிவனது அருளாணையின் வண்ணம் நான்முகன் திருமணச் சடங்கு நிகழ்த்தபாலசித்தர் தத்தநீர் வார்க்கவும்முருகன் கன்னியர் இருவரையும் மணந்தருளினார்.

அருள் கனிந்தது

அவ்வமயத்தில்சிவன் பாலசித்தரை நோக்கி, “இத்திருத்தலத்தில் நம் குமரனாகிய முருகன் என்றென்றும் திருவருளையும் குருவருளையும் வழங்கிக் கொண்டிருக்க இன்னும் ஐந்நூறு ஆண்டு காலம் அனைவருக்குக்கும் புலப்படுமாறு வெளிப்பட இருந்து வீரசைவ நெறியை ஓங்கச் செய்துபின் முருகனின் வலப்பாகத்தில் ஜீவசமாதி நிலையடைந்து பின் அருளுருப் பெற்று அனைவருக்கும் அருள் வழங்குக!” என அருள்புரிந்தார்.



No comments

Powered by Blogger.