சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 - தனுசு, மகரம், கும்பம், மீனம்
(மூலம், பூராடம், உத்தராடம் 4ம் பாதம்)
(யே, யோ,பா,பீ, பு, பூ, த, ப, ட, பே) போன்ற
எழுத்துகளை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் மார்கழி மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)
வான மண்டலத்தில் 9வது ராசியாக வலம் வரும் தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் – நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். இவருடைய
ராசியில் ஜனனமான நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை
முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள் இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ
அனுகூலத்தையும் பெற்றவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க
வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள்.
செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். உழைப்புக்கு உறைவிடமாகிய நீங்கள்
எப்பொழுதும் ஓடி ஓடி உழைப்பவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவீர்கள்.
இத்தகைய உயர் குணமுடைய உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி
பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி அவர்
உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே
நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய
சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்யச் செலவுகளையும்
குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் வலுவாக இருந்தாலும்
இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். அடிக்கடி அலைச்சல்கள்
அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து
வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள்
சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து
செயல்பட்டால் எதிர்பாராத வெற்றி அடைவீர்கள் என்பது நிச்சயம். பேச்சில் அதிக
எச்சரிக்கை தேவை. பணவரவு தாராளமாக இருந்து வரும். அதற்கேற்ப செலவினங்களும்
அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல்
வேண்டும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடை ஏற்படும். நெருங்கிய
உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளால் நன்மையும்
உண்டு தீமையும் உண்டு. எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று தடை ஏற்படும். புதிய
விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை
செலுத்துதல் வேண்டும். ஆரம்பத்தில் சொத்துகள் வாங்கினாலும் அதைப் பின்னால் கொடுக்க
வேண்டியது வரும். ஒரு சிலருக்கு பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்க
வாய்ப்பு அமையும்.
உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம்
செலுத்துதல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். போக்குவரத்து
வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற மனக்
குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட வெற்றி நிச்சயம்
உண்டாகும். விருந்து, கேளிக்கை
இவைகளில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும்.
சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பம்
உருவாகும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வலுவான
போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலை
கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான
வேலையை தேர்வு செய்தல் வேண்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை
அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல்
கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள்
வருவதில் சற்று கால தாமதமாகும்.
உடல் உழைப்பை அதிகப்படுத்தவும், வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலையில் ஊதிய உயர்வில்
உத்யோக உயர்வில் வலுவான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் பெற சிரமப்பட்டாலும் வேலை என்ற ஒன்று தொடர்ந்து நடந்து
வரும். அதன் மூலம் வருமானமும் வந்து சேரும். புதிய தொழில்கள் அல்லது கூட்டுது
தொழில் செய்ய சந்தர்ப்பம் அமையும். சிறு தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும்.
வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாக இருந்து வரும்.
புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும். தந்தையாரின் அன்பும்
ஆதரவும் அதிகரித்து காணப்படும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். குழந்தை
பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிட்டும். வேலையாட்களால் எதிர்பார்த்த
நன்மை அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். தேவையற்ற
செலவினங்களைக் குறைத்தல் வேண்டும்.
பரிகாரம் : அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில்
ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும்
நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு
எள் தீபம் ஏற்றி,
சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு
நன்மைகளை அருளட்டும்,
உத்தராடம் 2, 3, 4,ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2,ம் பாதங்கள்)
(போ, ஜ, ஜி, ஜூ, ஜே, க, கா, கீ) ஆகிய
எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் தை மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்.
வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின்
அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில்
நேர்மையும்,
செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும்
தைரியத்தோடும்,
தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள்.
நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும்
மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.
எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும்
விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும்
ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள்.
எதிலும் நிதானமும், நடு
நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.
12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலிட்டு
ஸ்தானமும் கூட,
உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள்
ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள்
செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம்
அமையும். குடியிருக்கும் வீடு, தொழில்
ஸ்தாபனம்,
பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை
நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள்
வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.
எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில்
தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற
விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற
பிரச்சனைகளும்,
இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும்
சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன்
செயல்படுதல் வேண்டும்.
எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால்
நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர
சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே
நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது
வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து
வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.
வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு
அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள்
சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள்
வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக
சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள்
உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற
விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற
போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.
உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும்.
போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள்
வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி
அவைகள் நல்லவிதமாக வந்து சேரும்.
சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம்
வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு
போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ
அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய
புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும்.
உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது நிரந்தர பழக்க
வழக்கங்களை மேற் கொள்ளக் கூடாது. முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும்
கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம்
அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக
கொண்டு செயல்படுதல் வேண்டும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில்
ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு
வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும்
சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்,
(அவிட்டம், 3, 4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி, 1, 2, 3,ம் பாதங்கள்)
(கு, கெ, கோ, ஸ், ஸீ, ஸே, த) ஆகிய எழுத்துக்களில் பெயரை முதல் எழுத்தாகக்
கொண்டவர்களும் தமிழ் – மாசி
மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்)
ராசி மண்டலத்தில் 11வது ராசியாகத் திகழ்வது கும்பராசி ஆகும். எதையும்
சந்திக்கும் ஆற்றலும், நெஞ்சிலே
உறுதியும் அனைவரையும் வசிகரிக்கும் ஆற்றலும் உடையவர்களாக திகழ்பவர் நீங்கள்.
தலைமைப் பணபும்,
எதையும் நன்கு சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். நல்லது, கெட்டது, எது என்று
பகுத்தாய்ந்து அதன் அடிப்படையில் செயல்படுவீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைச்
சாதிக்க வேண்டும் என்ற என்ணமும் சதா சிந்தித்து கொண்டும் சிந்தித்தை
செயல்படுத்தவும் அதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறவும் என்ன வழிகள் என்பதை
ஆராயும் திறமை உடையவர்கள்.
தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவ
வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாத
உயர்ந்த பண்பாளர் நீங்கள். உண்மை பேசுவதையும் உள்ளதை பேசுவதையும் நல்லதே பேச
வேண்டும் என்ற எண்ணம் உள்ள நீங்கள் சற்று சுய நலவாதிகளாகவும் விளங்குவீர்கள்.
உங்கள் மனதுக்கு சரி எனப்பட்டதை செய்யும் எண்ணம் உடையவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனிபகவான் உங்கள் ராசிநாதனுமாகி
அவர் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பானது
என்று தான் கூற வேண்டும். உங்களது கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி அதிகரிக்கும், பேச்சில் நடை, உடை
பாவனைகளில் மாற்றமும் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். இதுவரை
மனதில் இருந்து வந்த பயம், பீதி, மனக் குழப்பம் நீங்கி ஒரு தெளிவு உண்டாகும். அதற்கான சரியான
நபர்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும். அக்கம் பக்கம் உங்களை பற்றிய
பேச்சுக்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய அறிமுகம் மற்றவர்களை சென்றடையும்
காலமாகும்.
இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து
பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் நகைகள் இவைகல் எல்லாம்
கைக்கு வந்து சேரும். பேச்சால், எழுத்தால்
செயலால் ஒரு சிலருக்கு எதிர்பாராத தன வரவு பொருள் வரவு கிட்டும். உடன் பிறந்த
சகோதர சகோதரர்களால் நன்மை ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். புதுப் புது உறவுகள்
வந்து சேரும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் கூடும். அதே சமயம் நெருங்கிய
உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அல்லது அவர்கள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.
மனை வீடு, வண்டி
வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும்
அமையும். தாயாரால் எதிர்பாராத நன்மைகள் அமையும். அவர்கள் உடல் ஆரோக்யம் சீராக
இருந்து வரும். இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற தூக்கம் குறைந்து இனி ஓரளவு
நிம்மதியான தூக்கம் வந்து சேரும். உயர் கல்வி பயிலவும் அதனால் வேலை வாய்ப்பு
கிடைக்கவும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். பார்க்கும் வேலையில் ஒரு
திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல்
கூடாது. நேரத்திற்கு உனவு அருந்துதல் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்து காணப்படும்.
குடும்பத்தில் புது வரவுகள் அதாவது மருமகன் மருமகள் பேரன்
பேத்திகள் போன்றவர்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய படிப்பு
அல்லது புதிய பயிற்சி இவற்றை மேற்கொள்ள வேண்டிய காலமிது. இதுவரை இருந்து வந்த
தயக்கம் தடுமாற்றம் இவை விலகி உழைப்பு என்ற சொல்லே மேலோங்கி அதன் மூலம் பொருள்
ஈட்ட உங்களுக்கு சரியான காலம் இதுவாகும்
காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும்
இருக்கும். ஒரு சிலருக்கு காதல் வெற்றியாகி அது திருமணத்தில் நல்லபடியாக முடியும்.
இதுவரை இழுபறியாக இருந்து வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் தேவையற்ற
மனவருத்தங்கள் வேதனைகள் ஏற்படும். ஆன்மீக தெய்வீக தரிசனங்களும் ஆலய தரிசனங்களும்
அடிக்கடி சென்று வருதல் வேண்டும்.
வேலையாட்களால் இதுவரை நடந்து வந்த பிரச்சனைகள் ஓய்ந்து நல்ல
வேலையாட்கள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். மேலும் தேவையற்ற போட்டி எதிர்ப்பு, பகை, வம்பு வழக்கு
கடன் விவகாரம் போன்றவற்றை முறியடிக்க கூடிய ஆற்றல்களும் அதிகரிக்கும். வேலையின்
நிமித்தமாக பணியின் நிமித்தமாக தொழில் நிமித்தமாக வீடு, மாற வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு வந்து சேரும். வீடு
வாடகை அல்லது ஒத்திக்கு விட வேண்டிய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தந்தையாரின்
உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. வெளியூர், வெளிநாடு செல்வதில் சிறு சிறு தடைகள் ஏற்படும். மேலும்
நண்பர்களால் உறவினர்களால் எதிர்பாராத தனப் பராப்தி அமையும். தாய் மாமன்களால்
எதிர்பாராத நன்மை அமையும். வீட்டு வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் அதிக
எச்சரிக்கை தேவை.
பரிகாரம் : சர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை)
வில்வ இலை சமர்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம்
செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான்
உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்,
பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி
(த, தீ, து, தோ, ச, சா, சி, ஆகிய
எழுத்துக்களைப் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களும் பங்குனி மாதத்தில்
பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்)
வான மண்டலத்தில் 12அது ராசியாக உள்ள உங்கள் மீன ராசிக்கு அதிபதி கிரகம்
குருவாகும். தெய்வத்திற்கும் மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள் நீங்கள்.
எப்பொழுதும் எதையும் நிதானமாக யோசித்துச் செயல்படும் ஆற்றல் உடையவர்கள்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் மற்றவர்களை மதித்து நடக்கும்
பண்பும் உடையவர்கள். எதிலும் ஈடுபாட்டுடன் முனைந்து செயல்படும் நீங்கள்
மற்றவர்களின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்யத்துவம் கொடுப்பவர்கள்
ஆவிர்கள்.
இப்படிப்பட்ட குணம் உடைய உங்கள் மீன ராசிக்கு சனிபகவான்
உங்கள் ராசிக்கு இதுவரை 9ம் இடத்தில்
சஞ்சரித்தவர் இனி 10ம் இடமான
தொழில் ஜீவ ஸ்தானத்திற்கு வந்து பலன் அளிக்க உள்ளார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 11, 12 மற்றும் வீட்டுற்கதிபதியாவார், அவர் உங்கள் ராசிக்கு இப்பொழுது 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். பொதுவாகவே சனி பகவான் 10ம் வீட்டில் சஞ்சாரம் செயவது சிறப்பில்லை என்று பொதுவாகச்
சொல்லப்பட்டுள்ளது. எனவே அவை பற்றிய கவலையை விட்டுவிட்டு இனி என்ன மாதிரியான
பலன்களை உங்களுக்கு அளிக்க உள்ளார் என்பதைப் பார்ப்போம்.
உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும்
அந்தஸ்த்தும் அதிகரிக்கும். இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ்
அந்தஸ்து சற்று கூடும். அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை
அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து
சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று
வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும். எப்பவும்
அவசரப்படாமல் எதிலும் சற்று நிதானித்துச் செயல்படுவீர்கள் என்றால் வெற்றி
நிச்சயமாகும்.
தேவையில்லாமல் பணத்தை மிச்சப்படுத்தாமல் தேவையான
விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பத்தான் விரையச் செலவுகளைக்
கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள்
ஏற்படும். அதனால் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். பேச்சில் சற்று கவனமாக
இருத்தல் வேண்டும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையற்ற
விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக
எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும்.
அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து
சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக
இராது. புதிய விஷயங்களைக் கற்பதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். சகோதர
சகோதரிகளால் தேவையற்ற மனக் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.
உறவுகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மனவருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய
உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும், பழைய பொருளை
விற்றுப் புதிய பொருட்கள் அல்லது சொத்துக்கள் வாங்க வேண்டியது வரும். அல்லது வீடு
மராமத்து மற்றும் தேவையற்ற விரையங்கள் ஏற்பட்டு விலகும். வீடு வாடகை அல்லது
ஒத்திக்குப் போவதில் முட்டுக்கட்டை ஏற்படும் பின் நிறைவேறும். நல்ல வசதியான வீடு
ஒரு சிலருக்கு அமையும்.
மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி
அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி
நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான
போராட்டங்களுக்குப் பின் விலகும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை
இருந்து வரும். கடன் வாங்க வேண்டியது வரும். பழைய கடனை அடைக்கப் புதிதாக கடன்
வாங்க வேண்டியது வரும்.
போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் அதனால் ஒரு
சிலருக்கு நல்ல வேலை உத்யோகம் அமைய வாய்ப்பு ஏற்படும். கேட்ட இடத்தில் பணம்
கிடைக்கும். வழக்குகள் சற்று சாதகமாக அமையும். விவகாரத்து கேட்பவர்களுக்கு விவகாரத்து
கிடைக்கும். தாய் மாமன்களால் எதிர்பாராத நனமையேற்படும். வீட்டு வளர்ப்புப்
பிராணிகளால் நன்மையேற்படும்.
இதுவரை திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் இனிதே
நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன்
மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நண்பர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். தாயாரின் உடல்
நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த
நன்மைகளும் அமையும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர்
பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு
வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில்
வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
No comments