சனிபகவான் மந்திரங்கள்
துன்பங்களிலிருந்து விடுபட சொல்ல வேண்டிய சனிபகவான்
மந்திரங்கள்
நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான்.
சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல்
கெடுப்பவருமில்லை என்பர்.
எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய
முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.
இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை
வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும்
சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.
உங்களுக்கு ஏழரை சனியா?
அஷ்டம சனியா? இந்த
மத்திரத்தை சொல்லுங்க. சனி பகவானின் கருணை
உங்களுக்கு கிடைக்கும்.
சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி
அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி
அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
சனி மூல மந்திர ஜபம்:
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ"
40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில்:
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
தொண்டு:
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள்
கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக
ருத்ராட்சம் அணியவேண்டும்.
சனி திசை மற்றும் சனி புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி
மந்திரம் சொல்லி வரும் போது சனி பகவனால் ஏற்படும் திங்கு விலகி நன்மை உண்டாகும்.
(குறைந்தது 36,
54 முறை சொல்லி வரவும்) சனி பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை
தொடர்ந்து வழிபட்டு வரவும். பிரதோஷம், மற்றும்
சனிபிரதோஷம் சிறந்த வழிபாடு ஆகும். சனி ஷேத்திரம் திருநள்ளாறு கோவில், மற்றும் திருப்பதி, சென்று வழிபட்டுவரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி
தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள்
விருத்தி,
விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட
வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை
சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர்
உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணிக்கு பாணகை
ஸஹிதம் வரதம் பீத்தம்ஷ்ட்ரம் நீலோற்பலாற்ருதீம்
நீலமால்யானு லேபனம் ச நீலரத்னைரலங்க்ருதம்
ஜ்வாலோர்தல் மகுடா பாஸம் நீலக்ருத ரதான்விதம்
மேரும் ப்ரதகஷிணம் யாந்தம் சர்வலோக பயாவஹம்
க்ருஷ்ணாம்பர தரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ்திதம்
ஸர்வவ பீடாஹரம் ந்ரூணாம த்யாயேத் க்ரஹயோத்தமம்
நீலாஞ்சன சமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயாமார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைஸ்ச்சரம்
மேற்கண்ட மந்திரத்தை கூறி சனிபகவானை தினமும் தியானித்து வர
அவரது தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் குறையும் என்பது நம்பிக்கை.
இந்த மந்திரங்களால் ஏற்படும் பயன்கள்
ஆயுள்
விருத்தியாகும்,
விவசாயத்தில் மேன்மை,
எருமை விருத்தி,
இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்படும்,
உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்படும்.
வேலைக்காரர்களால் நன்மை பெறலாம்.
எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்கும்.
சளி, நெஞ்சுக்
கட்டு,
வாத நோய்கள் தடுக்கும்
சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர்
உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான்
என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும். சனி பகவான் மந்திரம் சனி பகவான்
மந்திரம் சனீஸ்வர மந்திரம்
வழிபாடு பரிகாரம்
பார்வையற்றோர், மாற்றுத்
திறனாளிகள்,
நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின
உழைப்பாளிகள்,
தொழிலாளிகள், பாரம்
தூக்குவோர்,
துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி
ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில்
பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு
வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை
சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய்
தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம்.
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.
No comments