ஆன்மீக தகவல்கள் - செல்வச் செழிப்பு உண்டாக
ஆன்மீக தகவல்கள் - செல்வச் செழிப்பு உண்டாக
மாதம்தோறும் வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை தினத்தில்
அன்னதானம் செய்தால், கடன்
பிரச்னைகள் நீங்கி, பணவரவு
கூடும்.

தினமும் காலை
வேளையில் பறவைகள் உண்ண தானியங்கள் இடுவதும், பசுவுக்குப் புல் வழங்குவதும் விசேஷமாகும். இதனால், வீட்டில் வறுமை நீங்கும்.
காலையில் எழுந்ததுமே பசுவையோ, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் குடம் இருக்கும் படத்தையோ
பார்த்து வந்தால் செல்வம் பெருகும்.
தினமும் காலையில் குளித்து முடித்ததும் சிறிதளவு சர்க்கரையை
எடுத்து,
வீட்டு வாசலில் தூவி வர வேண்டும். அப்படி தூவும் சர்க்கரை, எறும்புகள் உள்ளிட்ட சிறு பூச்சிகளுக்கு உணவாகும். இப்படிச்
செய்யச் செய்ய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும்.
No comments