குரு ஸ்ரீ ராகவேந்திர் - அற்புத மகிமை - 1 - கஷாய ( காவி உடை ) மகிமை
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெற வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
ஸ்ரீ ராகவேந்த்ரரின் அற்புத மகிமைகள் :
1. கஷாய ( காவி உடை ) மகிமை : ஒரு சீடன் வழக்கம்போல்
சுவாமிகளின் உடைகளைத் துவைப்பதற்காக காவேரிக்குச் சென்றுகொண்டிருக்கிறான். எதிரே
பிராமணர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவன் அவர்களைப் பார்த்து " நீங்கள்
மிகவும் பசியாலும், வெயிலாலும்
வாடியிருக்கிறீர்கள். உங்களுக்காக சுவாமிகள் மடத்தில் ஆகாரம் ஏற்பாடு
செய்திருக்கிறார்கள். கொழுக்கட்டை, பாயசம்
முதலியன கூட உங்களுக்காகத் தயாராக உள்ளது " என்றான்.
அவர்கள் ஆஸ்ரமம் அடைந்தார்கள், மடத்தில் கொழுக்கட்டை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று
நாம் நினைத்தது இவனுக்கு எப்படித் தெரியும் ? அதுவும் சுவாமிகளின் ஆடைகள் கையில் இருக்கும் போது மட்டும்
அவன் வாய் மலர்ந்து எப்படிக் கூறினான்? என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். அதை அவனிடமே கேட்டனர், அச்சமயம் அவன் ஆடைகளைக் கீழே வைத்திருந்தான், எனவே இவர்களைப் பார்த்து " என்ன விடயம் ? இதெல்லாம் எனக்கொன்றும் தெரியாது " என்று கூறினான்.
பிறகு அவன் சொன்னபடியே மடத்தில் நல்ல உபசாரம் நடந்ததைக்
கண்டு சுவாமிகளின் ஆடைகளுக்கே உள்ள மகிமையை அவர்கள் புரிந்து கொண்டு, சுவாமிகளிடம் தம் வணக்கத்தை தெரிவித்தனர்.
No comments