Header Ads

குரு ஸ்ரீ ராகவேந்திர் - பிருந்தாவன சஞ்சாரி

குரு ஸ்ரீ ராகவேந்திர்

மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும்சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
  
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்

|| ஸ்ரீ ||

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச



பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||

பிருந்தாவன சஞ்சாரி : ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், அன்றுமுதல் இன்றுவரை மந்த்ராலய க்ஷேத்திரத்திலுள்ள பிருந்தாவனத்தில் நித்திய வாசம் செய்துகொண்டு கீழ்க்கண்டவகையில் தமது நித்ய காரிய கிரமங்களை அமைத்துக்கொண்டும், பக்தர்களின் குறைகளை நீக்கிக்கொண்டும், விரும்பிய காரியங்களைக் கைகூடவைக்கும் கல்ப விருக்ஷமாக விளங்கிக் கொண்டுமிருப்பது நாம் எல்லோரும் செய்த பூர்வ புண்ணிய பயனேயாகும்.

பிருந்தாவன வாசியின் நித்திய காரியக் கிரமம் :

1 விடியற்காலை சுமார் 3 மணிக்கு துங்கபத்திரா நதியில் நீராடல்.

2. பிறகு பிருந்தாவனத்தில் பூஜைகள் நடக்கும்.  அதற்கான மணியோசை முதலியவைகளை முக்கியமாக தனுர் (மார்கழி) மாதங்களில் சேவாசத்திரத்திலுருந்து கேட்கலாம்.

3. தினந்தோறும் காலையில் தீபாராதனை காலத்தில் தறாமல் இரண்டு " குருவிகள் " வந்து பிருந்தாவனத்தின் சுவர்மீது உட்கார்ந்து தீபாராதனை முடிந்தவுடன் சென்றுவிடுகின்றன,

4. ஒரு பெரிய கிருஷ்ண சர்ப்பம் தினந்தோறும் இரவு 10 மணிக்கு மேல் விடியும் வரை பிருந்தாவனக் கோயில் பிரகாரத்தை சுற்றி வரவது விசேசம்.


ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மூல நூல்களாகவும், உரை நூல்களாகவும் சேர்த்து 46 கிரந்தங்களை இயற்றியிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.