குரு ஸ்ரீ ராகவேந்திர் - பிருந்தாவன பிரவேசம்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
பிருந்தாவன பிரவேசம் : ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தம்
பௌதிக வாழ்க்கையைத் துறந்து, பிருந்தாவனப் பிரவேசம் செய்வதற்காக மந்திராலயத்தில் தாமே
பிருந்தாவனம் அமைத்துக் கொண்டிருக்கிறார் எனும் செய்தி நாடெங்கிலும் பரவியது.
அவரது மகிமை அறிந்த மக்களெல்லாம் மந்திராலயம் வந்து சேர்ந்துவிட்டனர். பஞ்சபூதங்களாலான தமது சரீரத்தைத் துறக்கும்
சமயம் தமது பக்தர்கள் பெருமளவில் குழுமியிருந்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு
பெரும் மகிழ்ச்சியளித்தது.
அன்று விரோதிகிருது வருடம், சிராவண (ஆவணி) மாதம், கிருஷ்ணபக்ஷத்விதீயை (தேய்பிறை) குருவாரம். இது சுவாமிகள்
பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் நாள் என்பதை வெங்கண்ணரிடம் சொன்னார்கள். இது
எல்லோருக்கும் பரவி விட்டது, ஒருவரும்
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை விட்டு அகலவில்லை.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மலர்ந்த திருமுகத்துடன்
எல்லோருக்கும் காட்சியளித்தார். பின் தாம் அனுதினம் ஆராதிக்கும் சொரூப
மூர்த்திகளுக்கெல்லாம் முறைப்படி பூஜை செய்து ஆராதித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
தாம் அன்றாடம் வாசிக்கும் வீணையைத் தருவித்துத் தக்கபடி மீட்டினார். வீணை இசையுடம்
கூடி இறைவனை நினைத்துப் பாடினார் (இச்சமயம் சுவாமிகள் பாடிய பாடல் ஒன்றே இவர்
இயற்றிய பாடலாகும் ).
ராகம் : பைரவி
தாளம் : சாப்
பல்லவி
இந்து யனகே கோவிந்த நின்ன பாதாரவிந்தவ தேரோ முகுந்தா
சரணம்
நொந் தேனய்யா பவந்தன தொளுசிலுகி
முந்தேதாரி காணதே குந்திகேஜக தொளு
கந்தநெந் தென்ன குந்துக ளெணஸதே
தந்தே காயோ கிருஷ்ண கந்தர்ப்ப ஜனகா
மூடதனதி பலு ஹேடி ஜீவனனாகி
த்ருடபத்தி யனுநா மாடலில்லவோ ஹரியே
நோடலில்லலோ நின்ன பாடலில்லவோ மகிமே
கடிகார கிருஷ்ண பேடி கொம்பெனோ ஸ்வாமி
தரணி யொளூபூ பார ஜீவனனாகி
யேரே தப்பிநடது சேரிதே நினகய்யா
தீரவேணு கோபால பாருகாணிஸோ ஸ்வாமி
பிறகு வெங்கண்ணபட்டர் எனும் சீடரை அழைத்து அவருக்கு சந்யாஸ
தீக்ஷை அளித்து " ஸ்ரீ யோகீந்திரர் " என்னும் தீக்ஷா நாமம் சூட்டி அவரை
மடாதிபதியாக்கினர்.
அதன்பின் சகல வாத்திய கோஷங்களும் முழங்க பகவத்நாமஸ்மரணத்துடன்
(தெய்வ சிந்தனையுடன்) பிருந்தாவனத்தில் பிரவேசித்து அதன் மத்தியில் கமலாசனத்தில்
அமர்ந்தார். அவரது சீடர்கள் தயாராக வைத்திருந்த 700 சாலக்ராமங்களை நிரப்பி பிருந்தாவனத்தை பந்தனம் செய்தனர்.
உடனே ஸ்ரீ யோகீந்திர சுவாமிகள் அந்த பிருந்தாவனத்தின் மீது
ஸ்ரீ ராம சுந்தரமூர்த்தியை அமரச் செய்து ஆராதனையும் செய்தார்.
No comments