குரு ஸ்ரீ ராகவேந்திர் - மந்திராலயம் கிடைத்த விதம்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ர நாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட சித்திகளைப் பெற வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
மந்திராலயம் கிடைத்த விதம் : ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின்
மகிமையை உணர்ந்த நவாபு அதோனி தாலுக்கா முழுவதையும் சுவாமிகளுக்கு தானம் செய்வதாகச்
செய்தியனுப்பினார். ஆனால் சுவாமிகள் " மந்திராலயம் " எனும் ஒரு சிறு
கிராமம் மட்டுமே தாம் வாசம் செய்யப் போதுமானது என்று பதிலுரைத்தார். அதன்படி
" மந்திராலயம் " சுவாமிகள் வசம் வந்தது. இந்த இடம் முன்னாளில் பக்த
பிரகலாதன் யாகங்கள் செய்து " நரசிம்ம மூர்த்தியை " ஆராதித்த இடமாதலால்
இங்கேயே தங்கிவிட வேண்டுமென ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தீர்மானித்தார்.
அதன்படியே அங்கே ஒரு " பிருந்தாவனம் "
வெங்கண்ணரால் அழகாக அமைக்கப்பட்டது. அந்த பிருந்தாவனத்தில் சேர்ப்பதற்காக ஸ்ரீ
லச்சுமிநாராயண ரூபமான 700
சாலக்ராமங்கள் திரட்டப்பட்டன. பல பிராமணர்கள் அங்கு நித்திய பூஜைகளுக்காக
குடியேற்றப் பட்டனர்.
No comments