Header Ads

குரு ஸ்ரீ ராகவேந்திர் - மாமிசம் பழங்களாக மாறிய விந்தை

குரு ஸ்ரீ ராகவேந்திர்

மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும்சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
  
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்

|| ஸ்ரீ ||

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச



பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||

மாமிசம் பழங்களாக மாறிய விந்தை : வெங்கண்ணர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அதோனி வந்த செய்தியறிந்து முறையாக சுவாமிகளை வரவேற்றார். அப்பொழுது சுவாமிகளின் மகிமையை நவாபுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருநாள் நவாபு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மகிமையை சோதித்துப் பார்க்க விரும்பினார். அப்படியே பூஜாகாலத்தில் ஒரு சில கூடைகளில் மாமிசங்களை துணியால் மூடி அனுப்பி வைத்தார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பகவானுக்கு நிவேதனம் செய்யும் கட்டத்தில் அக்கூடைகள் மீது தீர்த்த நீரைத் தெளித்து துணியை விலக்கச் சொன்னார். என்னே விந்தை ! கூடைகளில் இருந்தனவெல்லாம் உயர்ந்த பழங்களாக மாறியிருந்தது. இந்த விசித்திரத்தை அறிந்த நவாபு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் வணக்கத்தைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.

No comments

Powered by Blogger.