Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 1

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும்


தத்தாத்திரேயரின் கருணைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு அலர்கனின் கதை.  அலர்க்கன் யார்? முன்னொரு காலத்தில் சத்ருஜீத் என்று ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல பண்புகளும் ஒழுக்கமும் மிக்கவன்.  நல்ல அரசாட்சியை தந்து வந்தவன் . அவனுக்கு ருதுத்வஜன் என்ற மகன் இருந்தான். அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை அவன் தனது தந்தையின் அனைத்து நல்ல பண்புகளையும் பெற்று இருந்தான். சாஸ்திர அறிவிலும் குறைவில்லை. ஆனால் அவன் எப்போதும் தனது நண்பர்களுடன் அலைந்து திரிந்து கொண்டு இருந்தவண்ணம் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருந்தான். அவனுடைய நண்பர்களில் இருவர் அவனுக்கு எப்போதும் உதவியவாறு அவனுடனேயே இருந்தார்கள்.  அவர்கள் இருவருமே அவனுடைய நெருங்கிய நண்பர்கள்.  ஆனால் அந்த இரண்டு நண்பர்களும் நாக லோகத்தை சேர்ந்த இளைஞ்சர்கள் என்பது ருதுஜ்வஜனுக்கு தெரியாது. அதை அவர்கள் அவனிடம் மறைத்து வைத்து இருந்தார்கள்.

இப்படியாக இருந்து கொண்டு இருக்கையில் ஒரு நாள் சத்ருஜித்தின் அரச சபையில் வந்த ஒரு முனிவர் தனக்கு ஏற்பட்ட ஒரு சங்கடத்தைப் பற்றிக் கூறினார். ' அரசே, நான் பல ஆண்டு காலமாக காட்டில் தவம் செய்து வருகிறேன். அங்கு ஒரு அரக்கன் வந்து தொந்தரவு செய்து என் தவத்தைக் கலைக்கின்றான். இத்தனை நாளாக செய்து வரும் தவத்தின் பலனை ஒருவன் அழிக்கின்றானே என வருந்தியபோது ஒரு அசரி கூறியது' நான் உனக்கு சூரியனின் வாகனங்களுக்கு இணையான சக்தி கொண்ட தேவலோகக் குதிரையை அனுப்புகிறேன். அதை நீ அரசனிடம் கொண்டு சென்று அவன் மகன் ருதுத்வஜனை அதன்மீது ஏறிச் சென்று அந்த அரக்கனை அழிக்கச் செய்' என்று கூறியது. ஆகவே மன்னா, நீங்கள்தான் எனக்கு அந்த அரக்கனை அழிக்க உதவ வேண்டும்' என்று கேட்டார். அடுத்தகணம் அவர் கூறியபடி அந்த தேவலோக குதிரை அங்கு வந்து நின்றது. அதை அந்த முனிவர் அரசரிடம் தந்தார். 

அரசன் நல்ல பண்பு மிக்கவன். தனது நாட்டில் உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவன். ஆகவே சற்றும் தயங்காமல் தன் மகன் ருதுத்வஜனை அழைத்து முனிவர் கூறிய அனைத்தையும் கூறி விட்டு அவனை அந்த முனிவருடன் சென்று அவருக்கு உதவுமாறு கூறினான். அவருடைய மகனும் சற்றும் தயங்கவில்லை. தன் தந்தையின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அந்த குதிரையிடம் சென்றான். அதை வணங்கி நிற்க அது உடனேயே கீழே அமர்ந்து கொண்டு தன் முதுகில் அவன் ஏறிக்கொள்ள வழி காட்டியது. அவனும் தன்னுடன் அந்த முனிவரையும் ஏற்றிக் கொண்டு முனிவரின் ஆசரமத்தை அடைந்தான். முனிவர் தவத்தில் இருக்க அவனும் இரவும் பகலும் அந்தக் குடிலை பாதுகாத்தபடி இருந்தான்.

Our Sincere Thanks to 
Santhipriya

https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.