Header Ads

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 2

ஸ்ரீ தத்தாத்ரேயர் - 17 - ருதுத்வஜனும் தத்தாத்திரேயரும் - 2

அப்போது ராஜகுமாரன் குடிலுக்கு காவலாக இருப்பதைக் கண்ட அரக்கன் ஒரு காற்றுப் பன்றியின் உருவில் அங்கு வந்து அவர் தவத்தைக் கலைக்க முயன்றான். அதைக் கண்ட ருதுஜ்வஜன் அதன் மீது தனது ஈட்டியை எரிய அது காயம் அடைந்து ஓடத் துவங்கியது. ருதுஜ்வஜனும் அதை விடவில்லை. அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு அதை துரத்தினான். அந்தப் பன்றியோ ஓடி பூமியை குடைந்து கொண்டே பாதாளத்துக்குள் சென்று மறைய அவனும் அதை துரத்திக் கொண்டு அந்த தேவலோக குதிரை மூலம் பாதாள உலகை அடைந்தான்.

அந்த பாதாள உலகிலோ கண்ணைக் கவரும் கட்டிடங்கள் இருந்தன.சுற்றிலும் பளிங்கு மாளிகைகள். அந்த இடத்தில் அந்தப் பன்றி எங்கே ஓடி விட்டது என எண்ணியவாறு அதை தேடி அலைந்தான். அவன் அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் வழியில் ஒரு இடத்தில் அழகிய பெண் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தான். அவள் உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு இருந்தாள். அவள் அவனை வியப்போடு பார்க்க அவனும் அவளை வியப்போடு பார்த்தான். அந்த மவுனத்தை விலக்கிக் கொண்டவன் அவளிடம் கேட்டான் ' அம்மணி, நான் ஒரு காட்டுப் பன்றியை துரத்திக் கொண்டு இங்கு வந்தேன். அது இங்குள்ள கட்டிடம் ஒன்றில்தான் அது ஓடி ஒளிந்து கொண்டு விட்டது. அதைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும். இந்த கட்டிடத்துக்குள் யார் வசிக்கின்றார்கள்?' என்று கேட்டான். அவன் அப்படிக் கேட்டு முடித்ததும் அவள் சடாலென வீட்டின் உள்ளே சென்று மறைந்து விட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 'ஒரு பெண்ணைக் கண்டேன். அந்தப் பெண்ணும் மாயமாக மறைந்து விட்டாள். வேறு யாருமே தென்படவில்லை. காட்டுப் பன்றியும் ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை' என எண்ணியவன்  மீண்டும் அந்த குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு அந்த கட்டிடத்தின் மாடி மீது சென்று இறங்கினான். குதிரையை அங்கேயே கட்டி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். என்ன அதிசயம். அவன் நுழைந்த அந்த அறைக்குள் ஒரு மஞ்சத்தில் அழகிய பெண்  ஒருவள் உட்கார்ந்து இருந்தாள் .

அவள் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அந்தப் பெண்  எதேர்ச்சையாக திரும்பினாள்.  யாரோ ஒரு ஆடவன் நிற்பதைக் கண்டு முதலில் பயந்தாலும், அவளும் அவன் அழகைக் கண்டு மயங்கி நின்றாள். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி பேசிக் கொண்டு இருந்தன. சிறிது நேரம்தான் . தன்னை உதாசீனப் படுத்திக் கொண்டவன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான் ' பெண்ணே  உன் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிகின்றன. நீ யார்?...உன் கவலை என்ன என்பதை எனக்குக் கூறினால் என்னால் ஆன உதவியை செய்கிறேன்'. அவள் மீண்டும் மவுனமாகவே இருந்தாள். ஆகவே மீண்டும் அவளிடம் நெருங்கி அவன் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருந்தபோது அவர்களின் பேச்சுக் குரலைக்   கேட்டு உள்ளே இருந்து ' குண்டலினி' எனக் கூவியவாறு ஒரு ஒரு பெண்மணி உள்ளே வந்தாள். அந்தப் பெண் வேறு யாரும் அல்ல. அந்த ராஜகுமாரன் முதலில் வெளியில் பார்த்த அதே பெண்தான். அவளிடமும் அதையே அவன் கேட்க அவள் கூறினாள்  ' ஐயா முதலில் நீங்கள் யார் என்று கூறுவீர்களா? நாங்கள் இங்கு பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளோம்.  மேலும்  விவரம் கூற முடியாமல் இருப்பதற்கு எங்களை மன்னியுங்கள்' . அவள் பயந்துகொண்டு மெதுவான குரலில் கூறியதைக் கேட்ட ருதுத்வஜனுக்குப் புரிந்தது அவர்கள் ஏதோ ஆபத்தில் சிக்கி உள்ளார்கள்.

Our Sincere Thanks to 
Santhipriya


https://santhipriyaspages.blogspot.in/ 

No comments

Powered by Blogger.