ஸ்ரீ இராமானுஜர் - 19 பகுதி-5-F
கூரத்தாழ்வார்
கூரத்தாழ்வார் நினைவாற்றலால் தான் உடையவர் ஸ்ரீ பாஷ்யம்
எழுத முடிந்தது. பிரம்ம சூத்திர விருத்தி உரையில் தவறு ஏற்படாத வண்ணம்
கூரத்தாழ்வார் தன் புலமையால் உடையவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார். மேலும்
வேதாந்த தீபம்,
வேதாந்த சாரம், வேதாந்த
சங்கிரகம்,
கீதா பாஷ்யம் ஆகிய நூல்களை ஸ்ரீ இராமானுஜர் இயற்றி
அருளினார். இதைத் தவிர சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்னும் கிரந்தங்களையும் நமக்கு
அருளியுள்ளார்.
பெரும் செல்வந்தராக இருந்த கூரத்தாழ்வார் அனைத்தையும்
துறந்து இராமானுஜரின் முதன்மை சீடராக ஆன பின்னால் அவர் தினம் பிச்சை எடுத்தே உண்டு
வந்தார். ஒரு நாள் அடைமழை பெய்ததால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்
கூரேசன். அவர் பட்டினி கிடப்பதைப் பார்த்து மனம் தாளாமல் அவர் மனைவி அரங்கனை
வேண்டினாள். திருவரங்கன் திருவருளால் கோவில் பரிசாரகர்கள் சிலர் வீட்டுக்கு வந்து
அறுசுவை உணவான பிரசாதத்தை வைத்துவிட்டுப் போயினர். அதை இருவரும் உண்டு பாசுரங்களை
சேவித்தவாறு உறங்கினர்.
மகாபிரசாதத்தை உண்டதன் பலனாக அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்
ஒரே சமயத்தில் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு பராசர பட்டர் என்றும் இளைய
குழந்தைக்கு வேத வியாச பட்டர் என்றும் இராமானுஜர் பெயர் வைத்தார். ஆளவந்தாரின்
திருவுள்ளக் குறையாக இருந்த மூன்றாவதையும் பூர்த்தி செய்தார் இராமானுஜர்.
No comments