ஸ்ரீ இராமானுஜர் - 22 பகுதி-6-C
திருநாராயணபுரப் பெருமாள்
இராமானுஜர் பல ஊர்களுக்குச் சென்று திருநாராயணபுரத்தை
அடைந்தார். அங்கு ஒரு நாள் காலை துளசி வனத்தை வலம் வரும்போது மண்ணில் புதைந்து
கிடந்த திருமாலின் திருவிக்கிரகம் ஒன்று கிடைத்தது. அவ்வூர் மக்களிடம் காட்டியபோது
அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய படை எடுப்பின் போது பல விக்கிரங்கள்
சேதப்படுத்தப் பட்டதால் அதனில் இருந்து காப்பற்ற இப்படி ஒளித்து வைத்து விட்டனர்
அவ்வூர் மக்கள். பின்னர் அன்றே ஒரு கூரையால் வேயப்பட்ட ஆலயம் எழுப்பப்பட்டு
அவ்விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார் உடையவர். யாதவாத்ரிபதி என்ற திருநாமத்துடன்
அப்பெருமாள்,
கோவிலில் குடி கொண்டார். வெகு விரைவில் கோவில் பெரிதாக
மாறியது. பக்கத்திலேயே ஒரு குளமும் எழுப்பினார் இராமானுஜர். அதன் அருகில் வெள்ளை
நிறத்தில் மணல் இருப்பதைப் பார்த்தார். அவ்வெண்மையான மண்ணே வைணவர்கள் திருமண்
தரித்துக் கொள்வதற்குப் பெரிதும் பயன் பட்டது. திருவரங்கத்தில் இருந்து அவர்
கொண்டு வந்திருந்த திருமண் குறைந்து கொண்டே இருந்த சமயம் இறை அருளலால் இது
கிடைக்கப் பெற்றது.
No comments