ஸ்ரீ இராமானுஜர் - 24 பகுதி-6-E
தமர் உகந்த திருமேனி
இந்நிலையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் திருநாரயணபுரத்தில்
எழுந்தருளியிருந்த இராமானுஜர், பெரிய நம்பி
பரமபதம் எய்ததையும் கூரேசர் திருமாலிருஞ்சோலையில் தனித்து வாழ்வதையும், மேய்ப்பனில்லாத ஆடுகள் போல் அடியார்கள் திருவரங்கத்தில்
தனித்து விடப்பட்டதையும் அங்கிருந்து வந்த வைணவர் மூலம் கேள்விப்பட்டு கண்ணீர்
உகுத்தார். அதற்கு மேல் இராமானுஜருக்கு திருநாராயணபுரத்தில் இருக்க முடியவில்லை.
திருவரங்கம் செல்லத் தீர்மானித்தார். அங்கிருந்த அடியவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
உடையவர் தன் உருவத்தை விக்கிரகமாக வடிக்கச் செய்தார். அதில் தனது அருளை முற்றும்
வைத்தார்.
“தமர் உகந்த திருமேனி” என்னும் திருநாமத்தோடு இன்றளவும் திருநாராயணபுரத்தில்
திகழ்கிறது. அங்கு தினப்படி பூஜைகள் தவறாமல் நடக்கின்றான்.
No comments