செவ்வாய் தோஷம் - பரிகாரங்கள்
செவ்வாய்
தோஷம் பரிகாரங்கள்
திருமணத்துக்குப்
பெண் பார்க்கவோ,
வரன் பார்க்கவோ தொடங்கும்போது ஜாதகத்தில் இருக்கும் முக்கியமான
இரண்டு தடைகள், நாக தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம்.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? இது எதனால் ஏற்படுகிறது?
''திருமணத்துக்குப் பெண் பார்க்கவோ, வரன்
பார்க்கவோ ஆரம்பிக்கும்போது ஜாதகத்தில் செவ்வாயின் இடத்தைக் கவனிப்பது முக்கியம்.
இதுதான் திருமண வாழ்க்கையில் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது.
செவ்வாய்
நம் ரத்தத்துக்கு உரிய கிரகம். யார் அடுத்தவங்களுடைய சொத்தை அபகரிச்சிருக்காங்களோ
அவங்களுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படும். குறிப்பா சகோதரர்களுடைய சொத்தை ஏமாத்தி
வாங்கிக்கிறவங்களுக்கு ஏற்படும். அப்படி அவங்களுக்கு ஏற்படலைன்னா அவங்க
பிள்ளைங்களுக்கு ஏற்படும்.
செவ்வாய்
பூமிகாரகன். செவ்வாய், இந்த பூமிக்குப் பொறுப்புக்காரர் .
பூமியைச் சேதப்படுத்தும்போது தோஷம் ஏற்படும். சாலைகளை சேதப்படுத்துவது, அணைகளை உடைக்கிறது, இந்த மாதிரி தப்பான
செயல்களைச் செய்யும் போதும், பொதுச் சொத்துக்களை
ஆக்கிரமிக்கும் போதும், அதாவது பார்க்கை சேர்த்து
பில்டிங் கட்டிட்டார்னு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி செய்வது, இந்த சிவில் கேஸ்கள்ல பார்த்தீங்கன்னா வரப்பு வாய்க்கால்களையெல்லாம்
அடுத்தவங்க நிலத்துலேர்ந்து தள்ளிக்கிட்டே வந்து
தன்னோட நிலத்தோட சேர்த்துக்கிட்டே வருவாங்க. நிலத்தோட எல்லை அளவைக் குறிக்கிறதுக்கு
காணிக்கல்னு ஒண்ணை நடுவாங்க. சில பேர் சொத்து
சேர்க்கணும்ங்கிற ஆசையில அந்தக் காணிக்கல்லைப் பிடுங்கி வேற இடத்துல நட்டுடுவாங்க.
இந்த மாதிரி சகோதரர்களோட சொத்தையெல்லாம் அபகரிச்சோம்னா, அது
அவங்க பிள்ளை, பேரப்பிள்ளைங்களுக்கு,
அல்லது ரெண்டாவது மூணாவது தலைமுறையில வரும் அவங்க சந்ததிகளுக்கு
செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும்.
முருகப்பெருமான்
செவ்வாய்
தோஷம் சுத்தமா ஏற்படக்கூடாதுனு நெனைச்சோம்னா, நம்ம
வாழ்க்கையில நேர்மையாவும் நியாயமாகவும்
நடந்துக்கிறது ஒண்ணுதான் வழி. அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாம, சகோதரர்களோட சொத்துக்களை அபகரிக்காம இருக்கணும். அவங்களுக்குச் சேர
வேண்டிய சொத்துக்களை முறையா அவங்களுக்குப் பிரிச்சுக்கொடுக்கணும்.
சில
பேர் பெத்தவங்களை தங்களோட பாதுக்காப்பில வைச்சுக்கிட்டு கடைசிநேரத்துல சகோதரனுக்கு
எதிரா அவங்கக்கிட்ட சொத்துக்களை எழுதி வாங்கி துரோகம் பண்ணிடுவாங்க. இதெல்லாம்தான்
கடுமையான தோஷமா மாறிடும்.
லக்னம், சந்திரன் அதாவது ராசி, சுக்கிரன்
ஆகியவற்றுக்கு 2, 4, 7, 8 மற்றும் 12 -ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமாகும். லக்னத்துக்கு ரெண்டாம் இடத்துல இருக்கிற செவ்வாயால் என்ன பிரச்னைன்னா
கணவன் மனைவிக்குப் பேச்சால பிரச்னை வரும். ரெண்டாம் இடத்துல செவ்வாய் இருந்தாலே
தனம், குடும்பம் வாக்குஸ்தானங்கிறதால பேசும்போது கவனமா
பேசணும். இல்லன்னா பிரச்னை வரும். இப்படிப்பட்டவங்களுக்கு வாக்குஸ்தானம் வலுவா
இருக்கிறவங்க ஜாதகத்தை சேர்க்கிறது நல்லது.
நாலாமிடத்துல
செவ்வாய் இருந்தால், அவங்களுக்கு உணர்ச்சி வேகம் அதிகம்
இருக்கும். அப்படிபட்ட ஜாதகங்களில் 4-ம் இடத்து
அதிபதியுடன் சேர்ந்திருக்கும் செவ்வாய், நாலாமிடத்துக்கு
நாலாமிடமான 8 - ம் இடம், 12 - ம்
இடத்தில் செவ்வாய் உள்ள ஜாதகத்தைச் சேர்க்கலாம். அப்படிச் செய்தால் பிரச்னை இல்லாத
மண வாழ்க்கை அமையும்.
ரத்தத்துல
உள்ள ஆர்.எச். ஃபேக்டருக்கு உரிய கிரகம் செவ்வாய். அதனாலதான் அதுக்குத்
தகுந்தமாதிரி கொண்டு போகணும். லக்னத்துக்கு 7-ம் இடத்தில்
இருக்கிற செவ்வாய்க்கு, லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ7 -ம் இடம், 8-ம் இடத்துல
இருக்கிற செவ்வாயைச் சேர்க்கலாம்.
முக்கியமா
பார்க்கப் போனா,
செவ்வாய் கிரகம் மனப்போக்கு, மனப்பாங்கு,
உணர்ச்சி மற்றும் தாம்பத்யம் இவற்றுக்குக் காரகத்துவம்
பெற்றிருக்கிறதால ரெண்டு பேரு ஜாதகமும் இதற்கு உகந்ததா இருக்கிறதாவென பார்த்து
சேர்த்தோம்னா கணவன் மனைவிக்குள்ள எந்தப் பிரச்னையும் வராது.
செவ்வாய்
தோஷத்துக்குப் பரிகாரம் முதல்கட்டமா ரத்ததானம் செய்வதுதான் சிறந்த
பரிகாரம்.
இது
தவிர,
ஏரி குளங்களைத் தூர் வாருவது, கோயில்
குளங்களைச் சீர்செய்வது, ஆற்றின் கரைகளை உயர்த்துறது,
நீர் வழித்தடங்களைச் சீர் செய்வது மாதிரியான பூமிக்கு நலமும்
வளமும் சேர்க்கிற செயல்களைச் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சகோதரர்கள், சகோதரிகளை அரவணைச்சுப்போறது ரொம்ப நல்லது. தீபாவளி, பொங்கல்னா அவங்களுக்கு புடவைத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறது, ஸ்வீட்ஸ் வாங்கிக்கொடுத்து அன்பா பார்த்துக்கிறது, போன தலைமுறையில இருந்த ஒரு வழக்கம். இன்னைக்கு எவ்வளவு பேர் இதைச்
செய்றாங்க?
இதையெல்லாம் செய்தால் செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும். அவங்க
மனம் குளிர்ந்து போய், 'எங்க அண்ணன் நல்லா இருக்கணும்.
எங்க அக்கா நல்லா இருக்கணும்'னு வாழ்த்தினாலே நம்ம
சந்ததிக்கு செவ்வாய் தோஷம் வராது. இது மாதிரி ப்ராக்ட்டிக்கலான பரிகாரங்கள்
நிறையவே இருக்கு.
குறிப்பாக
செவ்வாயை ஆளக்கூடிய கடவுள் முருகப்பெருமான். செவ்வாய் முருகனுக்கு அடிமை. சஷ்டி
விரதம் இருக்கலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். வீட்டிலும் ஒலிக்கச்செய்யலாம்.
பாம்பன் சுவாமிகளின் சமாதிக்குச் சென்றுவந்தால், செவ்வாய் தோஷ
பாதிப்புகள் விலகும். இப்படி எளிய பரிகாரங்களை மேற்கொண்டாலே செவ்வாய் தோஷத்தின்
பாதிப்பிலிருந்து மீளலாம்''.
No comments