குரு ஸ்ரீ ராகவேந்திர் - மடாதிபதி
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
மடாதிபதி யார் ? : இதன் பின் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் கும்பகோணம் சேர்ந்து
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு பூஜை செய்துகொண்டும் சீடர்களுக்கு ஸ்ரீ மத்வ
சாஸ்திரபாட பிரவசனம் ( உபன்யாசம் ) செய்து கொண்டும் இருந்தார். இதற்கிடையே, முன்பு தீர்த்த யாத்திரை சென்றிருந்த யாதவேந்த்ர சுவாமிகள்
திரும்பி வந்ததும் தாம் குருவின் ஜ்யேஷ்டன் என்ற காரணம் பற்றியும் மடதிபதிக்கான
உரிமை மற்றும் மூலராமர் பூஜை பற்றியும் கேட்டார். ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரும்
அதனை ஏற்று மடத்தையும் பூஜை செய்யும் வ்ழிகளையும் யாதவேந்த்ரரிடம் ஒப்படைத்தார்.
ஆனால் சீடர்களோ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரே மடத்தையும் அவ்விடம் பூஜைகளையும்
நடத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தஞ்சை அரசருக்குச் சென்றது. அரசரோ வழக்கை
சமத்காரமாகத் ( பொதுவாக ) தீர்த்து வைத்தார். அதாவது,
" நமது மடத்தில் இருக்கும் இரண்டு யதீந்திரர்களில் ஸ்ரீ யாதவேந்த்ர
தீர்த்தர் பிரதமச் சீடர் என்பது உண்மைதான், ஆனால் துவாபரயுகத்தில் அவதரித்த ஸ்ரீ யாதவேந்த்ர ( ஸ்ரீ
கிருஷ்ண )ரைவிட கிருதயயுகத்தில் அவதரித்த ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் பெரியவர்.
கம்பளியைப் போர்த்துக் கோண்டு கழியைக் கையில் பிடித்த கோபாலனாய்த் திரிந்த ஸ்ரீ யாதவேந்த்ர
தீர்த்தரை விட,
பட்டாபிஷேகம் செய்யப்பட்டு பதினாயிரம் ஆண்டுகள் மக்களை
ரஷித்த ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தருக்கே மடத்திற்கான பத்தியம் இருப்பது தகும் "
எனத் தீர்ப்பளித்தார். இந்த விசித்திரமான ஆனால் உண்மையான தீர்ப்பை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர். எனவே ஸ்ரீ ராகவேந்திரரே
மடாதிபதியானார்.
பிறகு சுவாமிகள், உடுப்பி " பண்டரீபுரம் " கொல்லாபுரம், திருப்பதி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீ முஷ்ணம், முதலிய சேத்திரங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். பிறகு
கும்பகோணம் சேர்ந்து ஸ்ரீ மடத்திலேயே தங்கியிருந்தார்.
No comments