குரு ஸ்ரீ ராகவேந்திர் - மனைவி சரசுவதி
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ர நாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்ட சித்திகளைப் பெற வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
மனைவி சரசுவதியின் கதி : வேங்கடபட்டரின் மனைவி சரசுவதி
பாய்க்கு தன் பதி சந்யாஸம் ஏற்றது தெரிந்ததும், அவர் மனமுடைந்து புத்தி பேதலித்து, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக
அவர் பேயுருவம் பெற்றார். இதையறிந்த ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர், சரசுவதி சுமங்கலியாக இறந்ததால், அவருடைய பந்துக்கள் வீடுகளில் நடக்கும் சுபகாரியங்களுக்கு
முன் சுமங்கலிப் பூஜை செய்ய ஏற்பாடு செய்தார். அவர்களும் அப்படியே செய்ய சரசுவதி
பேயுருவம் நீங்கி நற்கதி அடைந்தாள்.
No comments