குரு ஸ்ரீ ராகவேந்திர் - துறவி ஆனார்
குரு ஸ்ரீ ராகவேந்திர்
மகான்களின் திவ்ய சரித்திரங்களைப் படித்தாலே மறுமைக்கு வழிகாட்ட வல்லது. அதைப் படித்தும், சகஸ்ரநாமாவளியால் சுவாமிகளை அர்ச்சித்தும் ஸ்தோத்திரங்களைப் படித்தும் எல்லோரும் இஷ்டசித்திகளைப் பெறவேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறோம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
ஸ்ரீ ராகவேந்த்ர திவ்ய சரித்திரம்
|| ஸ்ரீ ||
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய ஜ்ஞாநரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||
துறவி ஆனார் : சில மாதங்களுக்குப் பின் சுதீந்திரர்
கும்பகோணம் விடுத்து தஞ்சை சேர்ந்து அங்கு தங்கி வந்தார். அவருடன் வேங்கடபட்டரின்
குடும்பமும் தங்கி வந்தது. இதனிடையே சுவாமிகளுக்கு தேகசௌகர்யம் குறைந்தது.
தமக்குப் பின் மடத்தை நிர்வாகிக்க வேண்டிய யாதவேந்திரரும் யாத்திரை
சென்றுவிட்டார். தாம் பூஜித்துவரும் ஸ்ரீ மூலராமமூர்த்தியின் பூஜையை யார் செய்வார்
?
என்ற கவலை அவரை துயரில் ஆழ்த்தியது. அன்றிரவு ஸ்ரீ
ராமச்சந்திரமூர்த்தி கனவில் தோன்றி " யாம் வேங்கடபட்டரை இந்த முறை சந்யாஸம்
ஏற்கும் படி செய்கிறோம் " என்று கூறினார்.
இந்தக் கனவை வேங்கடபட்டரிடம் கூற, அவரும் தானும் இவ்வாறே ஒரு கனவு கண்டதாகவும், இது தன் பாக்கியம் என்று ஏற்றுக்கொண்டார். ஆனால்
வேங்கடபட்டர் தாம் சந்யாஸம் மேற்கொண்டதை அவர்தம் மனைவியிடம் கூறவில்லை. உடனே தன்
குமாரனுக்கு உபநயனத்தை மட்டும் முறைப்படி பூர்த்தி செய்தார். பிறகு மனைவிக்குத்
தெரியாமல் (கி. பி. 1623) ருத்திரோத்காரி
வருடம்,
சுதீந்திர தீர்த்தரிடம் சந்யாஸ தீக்ஷையை பெற்றார்.
வேங்கடபட்டருக்கு ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என தீஷா நாமமிட்டார் குரு. இருவரும்
தஞ்சையிலேயே தங்கியிருந்தனர்.
No comments